கடமை நேரத்தில் அரச பணியாளர்கள் முகநூல் பயன்படுத்தக் கூடாது என அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
அரச பணியாளர்கள் தங்களது பணிக்கே முன்னுரிமை வழங்க வேண்டுமென அவர் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடமை நேரத்தில் தொலைபேசியையோ அல்லது முகநூலையோ பயன்படுத்தினால் அதனை தடைசெய்ய புதிய சட்டங்கள் கொண்டு வர நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு முகநூல் பயன்படுத்துவது கடமையை உதாசீனம் செய்வதாகவே கருதப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
அரச பணியாளர்கள் தங்களது பணி நேரத்தை முழுமையாக கடமையில் ஈடுபடுத்த வேண்டும் எனவும் செல்லிடப் பேசிகளை பயன்படுத்தக் கூடாது எனவும் ஜனக பண்டார தென்னக்கோன் கூறியுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.