விவசாயக் கடன்களைத் திருப்பிச் செலுத்தாத குற்றச்சாட்டில் இந்த ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அனுராதபுரம் , ஹொரவ்பொத்தானை பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வேட்பாளர் 2023 இல் எடுத்த 29,500.00 ரூபாய் விவசாயக் கடனைத் திருப்பிச் செலுத்தாததற்காக நீதிமன்ற உத்தரவுக்கமைய கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரவ்பொத்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.