பிரதான செய்திகள்

கடனின் சில பகுதியை முதலீடாகக் கோரியுள்ளோம்: ஹக்கீம்

பெய்ஜிங்கிலிருந்து ஏ.பி.மதன் சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட பாரியளவான கடன் தொகையின் சில பகுதியை முதலீடாக மாற்றுமாறு சீன அரசாங்கத்திடம் கோரியுள்ளோம் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

‘இலங்கை அரசாங்கத்துக்கு சீன அரசாங்கம் பாரியளவான கடன் தொகையினை வழங்கியுள்ளது. அவற்றினைக் கடனாகக் கருதி, திருப்பிச் செலுத்த வேண்டுமானால் பாரிய நட்டம் ஏற்படும். ஆகையினால் அக்கடன் தொகையின் சில பகுதியை இலங்கைக்கான முதலீடாக மாற்றுமாறு சீன பிரதமரிடமும் ஜனாதிபதியிடமும் கோரியுள்ளோம்.

எமது கோரிக்கையைப் பரிசீலிப்பதாக சீன அரசாங்கம் உறுதியளித்துள்ளது. எனவே, இதுதொடர்பிலுள்ள சட்டச் சிக்கல்கள் பற்றிய கலந்துரையாடல்களை மேற்கொண்டு, மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் தயாராக இருக்கிறது’ என, அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.12670504_1799609836939023_5581933397512397291_n

Related posts

ஒன்றிணைந்த தொழிற்சங்க ஏற்பாளர் ஆனந்த பாலிதவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Editor

அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும் – இரா.சாணக்கியன்

wpengine

மட்டு-பழைய கல்முனை காத்தான்குடி ஊர் வீதியின் இரண்டாம் கட்ட காபட் இடும் பணிகள் ஆரம்பம்.

wpengine