தேசிய போக்குவரத்து சபை, கடந்த 10 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 1,300 மில்லியன் ரூபா வருமானத்தை பெற்றுள்ளதாக, தேசிய சபையின் போக்குவரத்து முகாமையாளர் எச்.பியதிலக்க தெரிவித்தார்.
தமிழ் சிங்கள புத்தாண்டில் தமது சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள் மீள திரும்புவதற்கான விசேட போக்குவரத்துச் சேவைகள் தொடர்ந்து இடம்பெறுவதாகவும், இதனால் எதிர்வரும் நாட்களில் இந்த வருமானம் மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, கண்டி ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரையில் பங்கேற்கும் பக்தர்களுக்காக விசேட பஸ் சேவை இடம்பெற்று வருவதாக தெரிவித்த அவர், நாளாந்தம் கண்டி-கொழும்பு பாதையில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 150 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தேசிய போக்குவரத்து சபை போக்குவரத்து முகாமையாளர் எச்.பியதிலக்க தெரிவித்தார்