அம்பாறை தாக்குதலுக்கு அரசாங்கமே முழுப்பொறுப்பையும் ஏற்கவேண்டும் என ஐக்கிய சமாதான முன்னணியின் தலைவர் மிப்லால் மவ்லவி குறிப்பிட்டார்.
ஊடகங்களுக்கு அவர் அனுப்பியுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவாது,
நேற்று அம்பாறை நகரில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை ஒரு இனவாத தாக்குதல் சம்பவமாக நாம் பார்க்க வேண்டியுள்ளது.
தனிப்பட்ட ஒரு தகராரை மையமாக வைத்து ஒரு பள்ளிவாயல் தாக்கப்பட்டுள்ளது.இதனை பள்ளிவயளில் இருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்தில் உள்ள பொலிஸ் நிலையம் வேடிக்கை பார்த்துள்ளது.
இலங்கை முஸ்லிம்களை இலக்கு வைத்து பள்ளிவாயல்கள் மீது தாக்குதல் நடத்துவது இந்த நாட்டில் இன்று ஒரு சாதாரண விடயமாக போய்விட்டது.
அன்று கிந்தோட்டை எறிக்கப்பட்ட போது பொலிஸார் வேடிக்கைப் பார்த்தனர்.இந்த நல்லாட்சி அரசாங்கத்தை பாதுகாக்கும் தலைவர்களும் வேடிக்கை பார்த்தனர்.நல்லாட்சியை கொண்டுவந்த எமது சமூகமும் வேடிக்கை பார்த்து.அதனால் இன்று எம் சமூகம் மீதான வன்முறை ஒரு சாதாரண விடயமாக போய்விட்டது.
கடந்த ஆட்சிகாலத்தில் பள்ளிவாயல் மீது கல் வீசப்பட்ட போது கொதித்து எழுந்தவர்கள் எல்லாம் இன்று அரசாங்கத்தில் கிடைக்கும் சொகுசுகளுக்காஅக அமைச்சர்களாகவும் பாராளுமனறத்தில் உறுப்பினர்களாகவும் இருந்து கொண்டு அரசாங்கத்தை அழகு படுத்திக்கொண்டுள்ளனர்.
ஏசி அறைகளில் இருந்து பத்வா வழங்கும் எமது ஆன்மீக சபைகளும் இன்று எடுப்பார் கைப்பிள்ளைகளாக ஆகியுள்ளனர்.
அன்று முஸ்லிம்களுக்கு எதிராக கோஷம் எழுப்பி வன்முறைய தூண்டியவர்கள் இன்று அரசாங்கத்தின் கைப்பிள்ளைகளாக இருப்பதை எமது முஸ்லிம் சமூகம் கண்டும் காணாமல் போல் இருப்பதானால் இனவாதிகள் மேலும் ஆட்டம் போடுகின்றனர்.
நல்லாட்சி அரசாங்கத்தை கொண்டுவர தலைவர்களை முந்திக்கொண்டு சென்ற எமது முஸ்லிம் சமூகம் இன்று கைசேதப்பட்டுவிட்டதை உணர்ந்து செய்வதரியாது திகைத்துப்போயுள்ளனர்.
இந்த நேரத்தில் எமது முஸ்லிம் தலைமைகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் என அனைவரும் கட்சி இயக்க வேறுபாடுகளை களைந்து அவரசமாக ஒன்றினைந்து அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுக்க வேண்டும்.
இதுபோன்ற சம்பவங்கள் மேலும் தொடரால் இருக்க தீர்க்கமானதொரு உத்தரவாதத்தை பெறுவதுடன் கடந்த காலத்தில் இடம்பெற்ற அலுத்கமை கிந்தோfட்டை போன்ற கலவரங்களுக்கு நீதி கோரி பேராட வேண்டும் அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுத்து இனவாதிகளுக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.