உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

ஓரின காதல் ஜோடி திருமணம் செய்து கொள்ளவுள்ளார்கள்.

அமெரிக்காவில் உள்ள நியூயோர்க் நகரில் வசித்து வரும் இரு நாடுகளை சேர்ந்த ஓரின காதல் ஜோடி திருமணம் செய்து கொள்ளவுள்ளார்கள்.


ஓரின சேர்க்கையாளர்களான இரு பெண்களில் ஒருவரான அஞ்சலி சக்ரா இந்தியாவைச் சேர்ந்தவர். மற்றொருவர் பாகிஸ்தானை சேர்ந்த சுந்தாஸ் மாலிக். அஞ்சலி சக்ரா இந்து மதத்தை சேர்ந்தவர்.

சுந்தாஸ் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்.திருமணத்திற்கு முன்பு பாரம்பரிய உடைகளை அணிந்து, சிரித்தபடியும் முத்தமிட்டும் பல புகைப்படங்களை எடுத்துள்ளன.

இந்த புகைப்படத் தொகுப்பிற்கு ‘நியூயோர்க் லவ் ஸ்டோரி’ என்று பெயரிட்டு டுவிட்டரில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

இந்த டுவிட்டர் பதிவுக்கு 41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகள் கிடைத்துள்ளன.

மேலும் இணையத்தில் பலரும் இந்த காதல் ஜோடிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

திருமணத்திற்கு முன்பு இருவரின் அழகான புகைப்படத்தையும் புகைப்பட கலைஞர் சரோவர் அஹமத் பகிர்ந்துள்ளார்.

Related posts

டெபாசீட் பணத்தைக்கூட இழந்துதவிக்கும் சீமான்

wpengine

சுயலாப அரசியலுக்காக இந்த தாக்குதலை வேறு திசைக்கு மாற்றுகின்றார்கள்

wpengine

ஜனாதிபதி பதவியேற்று 10 நாட்கள்! இன்று என்ன நடக்கிறது

wpengine