பிரதான செய்திகள்

ஓரினச்சேர்க்கை யோசனை அமைச்­ச­ர­வையில் கூறி­யது யார்?

(ப.பன்னீர் செல்வம்,  எம்.எம்.மின்ஹாஜ்)

அமைச்­ச­ர­வையில் ஓரி­னச்­சேர்க்­கைக்கு அனு­மதி கோரி யோசனை முன்­வைக்­கப்­ப­ட­வில்லை.  இப்­ப­டி­ யோ­சனை முன்­வைக்­கப்­பட்­ட­தாக கூறி­யது யார்? மனித உரிமை செயற்­பாட்டுத் திட்ட அறிக்­கையில் பாலியல் நாட்டம் என்ற யோச­னையே முன்­வைக்­கப்­பட்­ட­தாக சுகா­தார, போசனை மற்றும் சுதேச வைத்­திய அமைச்சர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழ­க்கி­ழமை மருத்­துவ திருத்தச் சட்­ட­மூ­லத்தின் மீதான விவா­தத்தில் கலந்துகொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே  அவர் மேற்­கண்­ட­வாறு  குறிப்­பிட்டார்.

 

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

ஓரி­னச்­சேர்க்கை பெரும் பாதிப்பை ஏற்­ப­டுத்தக் கூடி­யது. இதன்­மூலம் எயிட்ஸ் நோய் அதி­க­ளவில் பரவி வரு­கின்­றது. ஆகவே இது குறித்து அர­சாங்கம் அவ­தா­ன­மாக செயற்­ப­டு­கின்­றது.

எனினும் ஓரி­னச்­சேர்க்­கைக்கு அங்­கீ­காரம் கோரி அமைச்­ச­ர­வையில் யோசனை முன்வைக்­கப்­பட்­ட­தாக கூறப்­ப­டு­கின்­றது. இப்­படி யோசனை முன்­வைக்­கப்­பட்­ட­தாக யார் கூறி­யது? அமைச்­ச­ர­வையில் ஓரி­னச்­சேர்க்­கைக்கு அங்­கீ­காரம் கோரு­மாறு யோசனை முன்­வைக்­கப்­ப­ட­வில்லை.

இது முற்­றிலும் தவ­றான கருத்­தாகும்.

அதற்கு மாறாக அமைச்­ச­ர­வையில் முன்­வைக்­கப்­பட்ட மனித உரிமை திட்­டத்தின் பிர­காரம் பாலியல் நாட்டம் என்று முன்வைக் கப்பட்ட யோசனையே நிராகரிக்கப்பட்டுள்ளது. மனித உரிமை யின் அடிப்படையிலேயே குறித்த யோசனை முன்வைக்கப்பட்டது என்றார்.

Related posts

மின் கட்டண குறைப்பு குறித்து வெளியான புதிய அறிவிப்பு!

Editor

சதாம் ஹுஸைனின் நினைவுச் சின்னங்களை பார்வையிட்ட பிரதி அமைச்சர்

wpengine

70வது ஆண்டு நிறைவில் சந்திரிக்கா, சிறிசேன மேடையில்

wpengine