பிரதான செய்திகள்

ஓமந்தை வாகன விபத்தில் இளைஞன் உயிரிழப்பு – ஒருவர் படுகாயம்!

இன்று அதிகாலை ஓமந்தை இராணுவ சோதனை சாவடிக்கு அருகாமையில் நின்றிருந்த உழவியந்திரம் மற்றும் பழுதடைந்துநின்ற கெப்ரக வாகனம் ஆகியவற்றுடன் அதே திசையில் பயணித்த பாரவூர்தி மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.
 

விபத்தில் கெப்ரக வாகனத்தில் இருந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு நபர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் 23 வயதுடைய இராமச்சந்திரன் சதீஸ்குமார் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
 

விபத்து தொடர்பான விசாரனைகளை ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

Related posts

நீதிக்குமான போராட்டத்தில் நாங்கள் வெற்றி கண்டுள்ளோம்! றிஷாட்

wpengine

சுசிலின் இடத்திற்கு எஸ்.பி. மேலும் இரண்டு அமைச்சர் நீக்க நடவடிக்கை

wpengine

அரச ஊழியர்கள், ஊடகவியலாளர்கள், சமுர்த்தி பயனாளிகளுக்கு ஸ்மார்ட் போன்

wpengine