(அனா)
ஜனாதிபதி பதவியேற்று இரண்டாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் மக்களிடம் கையளிக்கும் நிகழ்வும் செய்தியாளர் மாநாடும் இன்று (15.01.2017) இடம் பெற்றது.
ஜனாதிபதி பதவியேற்று இரண்டாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பதினாறு மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீ;ட்டில் அமைக்கப்பட்ட வீதிகள், வடிகான்கள், ஆற்று அனைக்கட்டு, கலாச்சார மண்டபம், புகையிரத கடவை என்பன இன்று (15.01.2017) மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
2016ம் ஆண்டிற்கான அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக ஊடகவியலாளர் மாநாடு ஓட்டமாவடி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச அபிவிருத்தி குழு தலைவரும்; பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தலைமையில் இடம் பெற்றது.
ஊடகவியலாளர் மாநாட்டில் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கருத்து தெரிவிக்கையில்.
ஏழைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல் வேண்டும் என்பதற்காகவே 2017ம் ஆண்டு வறுமை ஒழிப்பு வருடமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் வருமையை இல்லாமல் செய்வதற்கான பல்வேறு வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் பொருளாதார திட்டமிடல் அமைச்சு, மீள் குடியேற்ற அமைச்சு, கிராமயி பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, பாராளுமன்ற உறுப்பினர்களின் பண்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதிகள் மூலம் நூறு மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு அதற்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் இடம் பெற்றுள்ளதுடன் அதற்காக பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் என்றவகையில் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச செயலக ஊழியர்களுக்கு தனது நன்றியை தெரிவித்தார்.
இதே வேளை இந்த வருடம் ஓட்டமாவடி தேசிய பாடசாலை நூற்றாண்டு விழாவை கொண்டாடுவதற்கு தயாராகிக் கொண்டு இருக்கின்றது இதன் நூற்றாண்டு விழா நிகழ்வுகள் நான்கு நாட்களுக்கு இடம் பெறவுள்ளதுடன் இதற்கு பாடசாலை அபிவிருத்தி சங்கம், பழைய மாணவர் சங்கம், பாடசாலை நலன்விரும்பிகள், பிரதேச மக்கள் அனைவரும் உழைத்து வருவதாகவும் இந்த நூற்றாண்டு விழா சிறப்பாக இடம் பெறுவதற்கும் அனைவரதும் ஒத்துழைப்பும் எதிர்பார்க்கப்படுவதாகவும் பிரதி அமைச்சர் அமீர் அலி மேலும் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச சபை முன்னாள் பிரதி தவிசாளர் ஏ.எம்.நௌபல், பிரதேச சபை உறுப்பினர்கள் எல்.ரீ.எம்.புர்கான், ஐ.ரீ.அஸ்மி, பிரதேச செயலாளர் எம்.நௌபல், பிரதேச செயலக உதவி திட்ட பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.