செய்திகள்பிரதான செய்திகள்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை தேடி வெளிநாடுகளுக்கு பரக்கும் CID குழுக்கள்.

வெளிநாடுகளில் வசிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை இந்நாட்டிற்கு அழைத்து வருவதற்கான திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

இதற்காக குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளின் பல குழுக்கள் அந்த நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

குருநாகல் பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர்,

இந்த குற்றவாளிகள் மத்திய கிழக்கு உட்பட பல நாடுகளில் இருப்பதாகவும், அவர்களை கைது செய்ய இன்டர்போல் மூலம் சிவப்பு அறிவிப்புகள் பெறப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

பல திட்டமிட்ட குற்றவாளிகள் மலேசியாவில் இருப்பதாக சமூக ஊடகங்கள் மற்றும் வெகுஜன ஊடகங்கள் மூலம் சமீபத்தில் தகவல் பரப்பப்பட்டதாகவும், இந்த தகவல் துல்லியமானது அல்ல என்றும் அமைச்சர் வலியுறுத்தினார். 

Related posts

14 ஆயிரம் பட்டதாரிகள் இம்மாத இறுதிக்குள் இணைத்துக் கொள்ள நடவடிக்கை

wpengine

நடிகை கீர்த்தி சுரேஷ் இலங்கை வருகை..!

Maash

எம்.ஐ.எம்.முஸ்தபாவின் மறைவுக்கு நிஸாம் காரியப்பர் அனுதாபம்

wpengine