பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

ஒளியின் ஒளி (கவிதை)

(முசலி அமுதன்)

காட்டிற்கு நல்ல ஒளி
கலைமானும் குட்டிகளும்
வீட்டிற்கு நல்ல ஒளி
விடிவிளக்கும் பிள்ளைகளும்
பாட்டிற்கு நல்ல ஒளி
பல்சுவையும் நற்கருத்தும்
நாட்டிற்கு நல்ல ஒளி
நம் தலைவர் றிஷாட் என்பேன்!

கண்ணிற்கு நல்ல ஒளி
கவர்ந்திழுக்கும் பார்வையது
விண்ணிற்கு நல்ல ஒளி
வெண்ணிலவின் பிரகாசம்
மண்ணிற்கு நல்ல ஒளி
மாணிக்கக் கற்களது
வன்னிக்கு நல்ல ஒளி
வடிவிலுயர் றிஷாட் என்பேன்!

காலையில் நல்ல ஒளி
கதிரவனின் உதயமது
மாலையில் நல்ல ஒளி
மனங்கவரும் நிலா வருகை
சோலைக்கு நல்ல ஒளி
சுவை மிகுந்த கனி மரங்கள்
வேலைக்கு நல்ல ஒளி
வித்தகனார் றிஷாட் என்பேன்!

 

Related posts

அவர சிகிச்சைப் பிரிவில் கீதா குமாரசிங்க

wpengine

வடக்கு மாகாண சபையில் NFGGயின் ஆதரவு திரும்பப் பெறப்பட்டது

wpengine

மன்னாரில் சோதனைக்கு முன்பு பாடசாலை திறப்பு

wpengine