Breaking
Sun. Nov 24th, 2024
??????

பாறுக் ஷிஹான்

கிழக்கு மாகாணத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா  ஒலுவில் துறைமுக பகுதிக்கு   விஜயம் மேற்கொண்டிருந்தார்.

ஞாயிற்றுக்கிழமை(15) காலை 12 மணியளவில் குறித்த பகுதியில் இடம்பெறும் கடலரிப்பு தொடர்பாகவும் மீனவர்களின் வாழ்வாதரம் மற்றும் துறைமுக புனரமைப்பு தொடர்பாக பல்வேறு தரப்பிருடன் கலந்துரையாடினார்.இதன் போது துறைமுகத்தினை துரிதமாக புனரமைப்பதற்காக களவிஜயம் ஒன்றினையும் மேற்கொண்டு பல்வேறு தரப்பினரதும் கருத்துக்களை கேட்டறிந்து கொண்டார்.இந்நிலையில் குறித்த துறைமுகம் தொடர்பாக கருத்துக்களை பரிமாறும் போது பொதுமக்கள்  அமைச்சரின் முன்னால் கருத்து மோதலில் ஈடுபட்டிருந்தனர்.

இதன் போது கருத்து தெரிவித்த அமைச்சர் அம்பாறை மாவட்டத்தின் ஒலுவில் மீன்பிடித்   துறைமுகத்தில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருக்கும் அபிவிருத்தி பணிகள் தொடர்பாக ஆராய்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பாக  ஆராய வந்துள்ளதாக தெரிவித்ததுடன் ஒலுவில் பிரதேச மக்களின் கோரிக்கையை ஏற்று ஜனாதிபதி அவர்களும்  பிரதமர் அவர்களின் பணிப்புரைக்கமைய  கடற் தொழிலாளர்கள் மக்கள் பிரச்சினைகளை  அந்த மக்களுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கவே வந்துள்ளேன்.

அத்துடன் இதில்  பல்வேறு தரப்பினரின்  ஆலோசனையை பெற்று  ஒலுவில் துறைமுகத்தை பார்வையிட்டு  தீர்வு காணும் வகையில் பிரதேச மக்களின் பிரச்சினைகளை அறிவதற்காக  கடல் அரிப்பால் இவற்றை ஆய்வு செய்து  மூலம் வாழ்வாதாரத்தை இழந்த மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் முயற்சிகளை மேற்கொள்வேன்.

கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குறிப்பிட்ட ஒரு காலத்துக்குள் தீர்வு வழங்க முடியாது அது ஆரம்பித்து வைக்கமுடியும் முற்றுமுழுதாக தீர்த்து வைக்க முடியாது. ஏனெனில் குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்வைவை பெறக்கூடிய விடையமல்ல அடுத்து துறைமுகத்தை இயங்கு நிலைக்குக் கொண்டுவர உடனடியாக முடியும்  இரண்டு விடயத்தையும் சமகாலத்தில் ஆரம்பித்து வைப்பதற்கு தமது அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுத்த உள்ளோம்.

மேலும் அங்கு கருத்து தெரிவித்த மக்கள்  கடந்த காலங்களில் தாம் பல்வேறு பிரச்சினைகளுடன் தீர்வின்றி இருந்தபோதும் குறித்த துறைசார் பொறுப்பு மிக்க பதவியிலிருந்தவர்கள் எம்மை கண்டுகொள்ளாதிருந்தனர். ஆனால் நீங்கள் எமது பிரச்சினைகளை ஆரய்த்து கொள்வதற்காக நேரில்வந்தது ம்ட்டுமல்லாது வேற்றுமைகளோ பேதமைகளோ காட்டாது அனைவருக்கும் தீர்வு கிடைக்கவேண்டும் என செயற்படுவது தமக்கு மன நிறைவைக் கொடுக்கின்றது என்றும் சுட்டிக்காட்டினர்.இறுதியாக   கடற்றொழிலாளர்களது பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்தறித்துகொண்டபின்   ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷஇ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் நம்பிக்கையுடன் எனக்கு வழங்கியிருக்கும் இந்த கடற்றொழில் அமைச்சு பொறுப்பு அனைத்து மக்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும் வகையில் பயன்படுத்தப்படும்  என தெரிவித்தார்.

??????
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *