யாரோ பிள்ளைப் பெற எவரோ பெயர் வைக்கின்றார்கள் வெட்கங்கெட்ட மரக்கட்சிக்காரர்கள் ஓலுவில் கடலரிப்பால் அந்தப் பிரதேச மக்கள் 4 வருடங்களுக்கு மேலாக பட்டுவரும் கஸ்டங்களையும் துன்பங்களையும் அறிந்திருந்தும் கண்ணை மூடிக்கொண்டு கணக்கெடுக்காது இருந்த முஸ்லிம் காங்கிரஸ்காரர்களும் அதன் தலைவர் ஹக்கீமும் அவரின் அடிவருடிகளும் இன்று 2016.08.07 அந்த பிரதேசத்துக்கு செல்லப்போவதாக முகநுால்களிலும், இணையத்தளங்களிலும் அறிக்கை விட்டுள்ளனர்.
அ. இ.ம. கா தலைவர் அமைச்சர் றிசாட் பதியுதீன் இந்த மக்களின் அவலங்களை நேரிலும் அந்த மக்களின் பிரதிநிதிகள் வாயிலாகவம் அறிந்து கண்டும் கேட்டும் கடலரிப்பை தடுக்க அவர் மேற்கொண்டுள்ள முயற்சிகள் திருவினையாக்கி அவர்களுக்கு தீர்வு கிடைக்கப் போகின்றது என்பதை அறிந்த பின்னர் மு.கா இப்போது துடியாய் துடிக்கத் தொடங்கியுள்ளனர். யாரோ பிள்ளைப்பெற எவனோ பெயர் வைக்கும் கதையாகத்தான் இது இருக்கின்றது.
ஒலுவில் பள்ளிவாசல் சம்மேளனம்- அங்குள்ள சமூகநல அமைப்புகள் புத்திஜீவிகள் இணைந்து கடந்த வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்திய போது அங்கு எட்டியம் பார்க்காத அந்த மக்களின் பரிதாப நிலை குறித்து இவற்றை வரை வாய் திறக்காத மு.கா தலைவர் ஹக்கீம் இப்போது தனது படைபட்டாளத்துடன் ஒலுவில் வந்து ஏதோ பண்ணிப்படைக்கப்போவதாக மாகாணசபை உறுப்பினர் தவம் இணையத்தளங்களில் செய்தி வெளியிட்டுள்ளார்.
துறைமுக அதிகார சபைத்தலைவர் தம்மிக்க ரணதுங்கவுடன் அமைச்சர் றிசாட் கொழும்பில் நடத்திய உயர்மட்ட பேச்சுவார்த்தையின் பிரதிபலன்- கரையோர பாதுகாப்புதிணைக்கள பிரதிப்பணிப்பாளர் பிரபாத் அவர்களை பல தடவை சந்தித்ததன் விளைவு ஜனாதிபதி பிரதமர் அமைச்சர்களான அர்ஜூன ரணதுங்க மகிந்த அமரவீர ஆகியோருடனான பேச்சு ஆகியவற்றினால் ஒலுவில் கடலரிப்பை தடுக்க தற்காலிக தடுப்பணை போடுவதற்கு துறைமுக அதிகாரசபை முடிவெடுத்தது இன்று அதிகாரிகள் குழுவும் அங்க விரைகின்றது இதனை அறிந்து ஆட்டை துரத்தும் நாய் போல முஸ்லிம் காங்கிரஸ் காரர்களும் அங்கு ஓடுகின்றனர்.
முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் ஒலுவில் முஸ்லிம்கள் |மு.கா . கட்சிக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருந்தவர்கள் எனினும் அஸ்ரபின் மறைவின் பின்னர் ஒலுவில் மக்களை மு.கா ஏறெடுத்தும் பார்ப்பதில்லை தேர்தலுக்கு மட்டும் அங்கு சென்று அப்பாவி முஸ்லிகளின் இரத்தத்தை சூடாக்கி வாக்குகளை மட்டும் கொள்ளையடிப்பது அவர்களின் வாடிக்கையாய் விட்டது.
ஓலுவில் மக்களிடம் துறைமுக அமைப்புக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு இன்னுமே நஸ்டஈடு பெற்றுக்கொடுக்காதவர்கள் இராணுவம் ஆக்கிரமித்துள்ள ஒலுவில் மக்களின் விவசாயக் காணிகளை இற்றை வரை பெற்றுக்கொடுக்க கையாலாகாதவர்கள் இப்போது ஒலுவில் மக்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர்.
றிசாட் இந்த முயற்சியில் வெற்றி பெற்று விட்டால் தங்களது இருப்புக்கு உலை வைக்கப்பட்டுவிடும் என்ற ஒரே ஒரு பயத்திலேயே அவர்கள் இன்று ஒலுவில் படையடுக்கின்றனர்.