பிரதான செய்திகள்

ஒரு மூடை உரத்திற்கு 2,500 ரூபா கட்டுப்பாட்டு விலை! ஜனாதிபதி அறிவிப்பு

விவசாயிகளுக்கு வழங்கப்படும் சகலவகையான உரவகைகளினதும் ஐம்பது கிலோ கிராம் மூடை ஒன்றுக்கு 2,500 ருபா உச்ச விலையை நிர்ணயிப்பதற்கு  ஜனாதிபதி குறித்த தர்ப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அத்துடன், இன்று நள்ளிரவு முதல் கிழங்கு மற்றும் பெரிய வெங்காயங்களின் இறக்குமதித் தீர்வையை அதிகரிப்பதற்கும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

நாடெங்கிலுமுள்ள விவசாய சமூகத்தினர் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு குறித்த சகல தரப்பினரதும் பங்குபற்றுகையுடன் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போது ஜனாதிபதி  இந்த ஆலோசனைகளை வழங்கினார்.

இதுவரையில் 50 கிலோ கிராம் உரமூடையொன்று 2750 ரூபா 3400 மற்றும் 3500 என்ற விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

மேலும், உரக்கொள்வனவின்போது விவசாய சமூகத்தினர் முகங்கொடுத்து வந்த பல்வேறு அசௌகரியங்களைக் கவனத்திற்கொண்டு ஜனாதிபதி இந்த ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

உரமூடையின் மேற்பகுதியில் உரத்திற்கான  விலை காட்சிப்படுத்தப்படுவதை கட்டாயமாக்கும்படியும் ஜனாதிபதி இதன் போது ஆலோசனை வழங்கியுள்ளார்.

அரசாங்க மற்றும் தனியார்த்துறை இரண்டிலும் உரத்தினை கொவிஜனசேவா மத்திய நிலையத்தினூடாக விநியோகிப்பதற்கும் ஆலோசனை வழங்கினார்.

ஹெக்டயார் ஒன்றுக்கு விவசாய  சமூகத்திற்கு வழங்கப்படும் 25,000 ரூபா உர மானியம் விவசாயிகளின் எந்தவொரு வங்கிக்கணக்கிற்கும் வரவு வைக்கப்படுவதற்கும்  விவசாயிகள் பெற்றுக்கொண்டுள்ள கடன்தொகைக்கு அந்த உதவித்தொகையிலிருந்து அறவிடாதிருப்பதற்கும் ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

இங்கு கருத்துத் தெரிவித்த  ஜனாதிபதி, விவசாய சமூகத்தினர் அசௌகரியங்களுக்கு உள்ளாகும்வகையில் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்பட மாட்டாது என்றும் அதேபோன்று விவசாய சமூகத்தினர் மீது பொருளாதார சுமைகளைச் சுமத்தாதிருப்பதும் அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் தெரிவித்தார்.

நெல் கொள்வனவு மற்றும் உரமானியம் தொடர்பில் விவசாய சமூகத்தினர் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பாக எதிர்வரும் அமைச்சரவைக்கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடி அப்பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்க நடவடிக்கைகளை எடுப்பதாகவும்  ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இப்பிரச்சினை தொடர்பில் ஒரு விசேட கலந்துரையாடல் பொலன்னறுவை மாவட்ட விவசாய சங்க உறுப்பினர்களின் பங்குபற்றுகையுடன் நேற்று பிற்பகல் பொலன்னறுவையில் நடைபெற்றதோடு, அதன்போது அவ்வுறுப்பினர்கள் முன்வைத்த பிரச்சினைகள் தொடர்பாகவும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

அரசாங்கத்தினால் செயற்படுத்தப்படும் தேசிய உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டம் மாகாண மட்டத்தில் நடைமுறைப்படுத்தும்போது அடைந்துள்ள முன்னேற்றம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

‘நச்சுப்பொருட்கள் அற்ற நாடு’ தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மார்ச்ச மாதம் 06ஆம் 07ஆம் மற்றும் 8ஆம் திகதிகளில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ள தேசிய கண்காட்சி குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.

இதேவேளை, இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, துமிந்த திசாநாயக்க  மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தமிழர்களின் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தவர்களின் பலர் இஸ்லாமியர்கள்

wpengine

விக்னேஸ்வரனுக்கு எதிராக கொழும்பில் வழக்கு தாக்கல்

wpengine

அம்பாறை நகரில் முஸ்லிம்களுக்கு எதிராக சம்பவம் விசாரணை வேண்டும்

wpengine