பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

ஒரு கோடி ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் மன்னாரில் மூவர் கைது

மன்னார் நிருபர் லெம்பட்-

மன்னார் இலுப்பகடவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிப்பி ஆறு பகுதியில் டிப்பர் வாகனம் ஒன்றில் மறைத்து கொண்டு செல்லப்பட்ட ஒரு கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதிகள் இன்றைய தினம் (18) காலை மன்னார் பொலிஸ் நிலைய ஊழல் தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடற்படை புலனாய்வு தகவலுக்கமைய மன்னார் மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் (01) கஸ்தூரி ஆராட்ச்சியின் பணிப்பில், மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி CI ஜெயதிலக, உப பொலிஸ் பரிசோதகர் திலங்க தலைமையிலான குழுவினரே சிப்பி ஆறு பாலத்திற்கு அருகாமையில் மறைத்து டிப்பர் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட மேற்படி 89 கிலோ 355 கிராம் கேரள கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர்.

அதே நேரம் கேரள கஞ்சாவினையும், அதனை கொண்டு செல்ல பயன்படுத்திய டிப்பர் வாகனத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் இதனை கொண்டு சென்ற மூன்று சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.

இவர்களில் இருவர் வவுனியா கூமாங்குளம் பகுதியையும் மற்றைய நபர் வவுனியா தவசிகுளம் பகுதியையும் சேர்ந்த 25, 44, 31 வயதுடைய நபர்கள் ஆகும்.

சந்தேக நபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட கஞ்சா,மற்றும் டிப்பர் வாகனம், மேலதிக விசாரணையின் பின் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.

Related posts

விக்னேஸ்வரனுக்கு எதிராக நீதியரசர் ஸ்ரீபவனை கொண்டுவரும் கூட்டமைப்பு

wpengine

முசலி-கொக்குப்படையான் குடிநீர் வினியோக திட்டத்தின் அவலநிலை! கவனம் செலுத்தாத பிரதேச சபை (படங்கள்)

wpengine

நுால் வெளியீட்டுவிழாவில் பிரச்சினைகளை வைத்து அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் – பைசா் முஸ்தபா

wpengine