உள்நாட்டு விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தை 80 ரூபாய் ஆகக் கூடிய நிர்ணய விலைக்கு கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (28) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை இணை பேச்சாளர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சரவை கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:
பெரிய வெங்காயத்திற்காக அரசாங்கம் ஆக கூடிய உறுதி செய்யப்பட்ட விலையை முன்னெடுத்ததன் மூலம் பெரிய வெங்காய உற்பத்தியாளர்களின் வருமானத்தை அதிகரித்தல்.
´நாட்டை மேம்படுத்தும் சௌபாக்கிய தொலைநோக்கு´ கொள்கை பிரகடனத்தின் மூலம் பெரிய வெங்காயம் போன்ற பயிர் உற்பத்திக்கான புதிய திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கும் இதனை இறக்குமதி செய்வதற்காக ஒதுக்கீடு செய்யப்படும் ஆக கூடிய வெளிநாட்டு நாணய பயிர் உற்பத்தியை மேற்கொண்டு விவசாயிகளின் வருமானமாக முன்னெடுப்பதற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு தமது அறுவடைக்கான நியாயமான விலையைப் பெற்றுக்கொடுத்து உற்பத்தித் துறையில் அவர்களை ஊக்குவிப்பதற்காக பெரிய வெங்காயத்தின் நிர்ணய விலையை மேற்கொள்வதற்கும் இந்த உற்பத்திக்கான காணியின் ஆக கூடிய பலனைக் கொண்டதாக பயன்படுத்துவதற்கு பொருத்தமான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிப்பது அத்தியாவசியமானது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதற்கு அமைவாக ஒரு கிலோ பெரிய வெங்காயத்திற்காக தற்பொழுது வழங்கப்படும் 60.00 ரூபாவான ஆகக் கூடிய நிர்ணய விலையை 80.00 ரூபா வரையில் அதிகரிப்பதற்கும் பெரிய வெங்காய உற்பத்தி அறுவடையை அதிகரிப்பதன் மூலம் உற்பத்தியை அதிகரிப்பதற்காக மகாவலி விவசாயம், நீரப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சின் மூலம் விசேட வேலைத்திட்டத்தை துரிதமாக நடைமுறைப்படுத்துவதற்கும் நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.