பிரதான செய்திகள்

ஒரு கட்சியின் இரு மேதின கூட்டங்கள்

கிருலப்பனையில் நடைபெறவுள்ள மகிந்த ஆதரவு மேதினப் பேரணியில் கலந்து கொள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தராஜபக்ஷ சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ்குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ஷவை நேற்றையதினம் தினேஸ்குணவர்தன உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் சந்தித்திருந்தனர்.

இதன்போது குறித்த பேரணிக்கான அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், அதனை அவர் ஏற்றுக் கொண்டதாகவும் தினேஸ்குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரதான மே தின பேரணி காலியில் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு புறம்பாக இந்த பேரணி கிருலப்பனையில் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மைத்திரி,ரணில் அரசு ஞானசார தேரரை விடுவிக்க நடவடிக்கை

wpengine

நிதி மோசடி! நாமல் குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜர்

wpengine

புத்தளத்தில் வெள்ளம் 7 பேர் உயிரிழந்துள்ளனர்-மாவட்டச் செயலாளர்

wpengine