பிரதான செய்திகள்

ஒரு ஏக்கருக்கு குறைவான நெற்செய்கை விவசாயக் குடும்பங்களுக்கு நிவாரணம்!

நடப்பாண்டில் ஆறு மாவட்டங்களில் உள்ள 48,000 விவசாயக் குடும்பங்களுக்கு நிவாரண உதவித்தொகையை வழங்க சர்வதேச ஒத்துழைப்புக்கான யுனைடெட் ஸ்டேட்ஸ் ஏஜென்சி அல்லது USAID முடிவு செய்துள்ளது.

நாட்டில் ஒரு ஏக்கருக்கும் குறைவான நெற்செய்கையை மேற்கொள்ளும் 48,000 குறைந்த வருமானம் பெறும் விவசாயக் குடும்பங்களுக்கு தலா 15,000 ரூபா வீதம் இரண்டு தவணைகளின் கீழ் ஒரு குடும்பத்திற்கு 30,000 ரூபாவை வழங்குவதற்கு இணங்கியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் ஒரு ஏக்கருக்கும் குறைவான நிலப்பரப்பில் நெல் பயிரிடும் விவசாயக் குடும்பங்களுக்கு இந்த மானியம் வழங்கப்படவுள்ளது.

Related posts

விண்ணப்பம் கோரவுள்ளது! ஐக்கிய தேசிய கட்சி தனித்து போட்டி

wpengine

விடைத்தாள் திருத்தும் பேராசிரியர்களுக்கான கொடுப்பனவு 90% ஆக அதிகரிப்பு!

Editor

வவுனியாவில் அபாய ஒலி! பயணிகள் அச்சம்

wpengine