பிரதான செய்திகள்

ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட எடை குறைந்த குழந்தைகள் இலங்கையில்!

இலங்கையில் ஐந்து வயதுக்குட்பட்ட எடை குறைந்த குழந்தைகள் ஒரு இலட்சத்து முப்பத்தாறாயிரத்து இருநூற்று அறுபத்தைந்து பேர் இருப்பதாக தெரியவந்துள்ளது.

குடும்ப சுகாதார சேவைகள் பணியகத்தின் தரவு அறிக்கைகளின்படி இந்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் இந்த சதவீதம் 15.5 சதவீதமாக உள்ளது.

ஐந்து வயதுக்குட்பட்ட எடை குறைந்த குழந்தைகள் நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் பதிவாகியுள்ளதுடன் இருநூற்றி இருபத்தி இரண்டு குழந்தைகள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.

கொழும்பு மாநகர சபைக்குள் மட்டும் எடைக்குறைந்த குழந்தைகள் 2160 பேர் இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

வயது தொடர்பான எடை இழப்பு குறைந்த எடை என்றும், குட்டை மற்றும் மெலிந்த குழந்தைகள் எடை குறைவான குழந்தைகள் என்றும் அடையாளம் காணப்படுகிறார்கள்.

குடும்ப சுகாதார சேவைகள் அலுவலகத்தின் தரவு அறிக்கைகளின்படி நகர்ப்புறம், கிராமம் மற்றும் தோட்டங்கள் என அனைத்துத் துறைகளிலிருந்தும் எடை குறைந்த குழந்தைகளின் அறிக்கை அதிகரித்து வருகிறது.

உணவுப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக ஆபத்துக் குழுக்களைச் சேர்ந்த குடும்பங்களுக்கிடையில் ஊட்டச் சத்துக் குறைபாடுகள் உருவாகி வருவதால் எடை குறைந்த குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

Related posts

இலங்கையில் சிறந்த ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை!
-ஜனாதிபதி-

Editor

தமிழ் தேசியத்தை காக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயம்

wpengine

மன்னார்,பாலைக்குழில் ஆயுதம்! ஏமாந்து போன படையினர்

wpengine