பிரதான செய்திகள்

ஒன்லைன் மூலம் பணம் செலுத்தும் முறைக்கு மாறும் உள்ளூராட்சி மன்றங்கள்!

இந்த வருட இறுதிக்குள் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் இணையத்தளத்தில் பணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வேலைத்திட்டம் ஏற்கனவே 69 உள்ளூராட்சி நிறுவனங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அந்த உள்ளுராட்சி நிறுவனங்களில் தற்போது ஒன்லைன் முறையின் ஊடாக வரிகளை செலுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நிர்மாணத்துறைக்கு தேவையான அனுமதிகளை ஒன்லைன் முறையின் கீழ் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

மக்கள் எவ்வித அசௌகரியமும் இன்றி தமது கடமைகளை மேற்கொள்ளும் நோக்கில் இந்த புதிய வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், இவ்வருட இறுதிக்குள் நாடளாவிய ரீதியில் உள்ள 341 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

Related posts

அட்டாளைச்சேனை மக்களின் காணியினை பெற்றுக்கொடுத்த ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்

wpengine

ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

wpengine

உலகில் சிறந்த ஆசிரியருக்கான விருது

wpengine