பிரதான செய்திகள்

ஒட்டமாவடியில் சுதந்திர தின மரநடுகை

(அனா)
இலங்கையின் 69வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இமாம் ஜவ்பர் சாதிக் சமுக சேவைகள் அமைப்பு ஏற்பாடு செய்த மரம் நடுகை நிகழ்வும் மாணவர்களுக்கான புலமை பரிசில் வழங்கும் நிகழ்வும் நேற்று (05.02.2017) மாலை ஓட்டமாவடி பாலைநகர் கிராமத்தில் இடம் பெற்றது.

இமாம் ஜவ்பர் சாதிக் சமுக சேவைகள் அமைப்பின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எல்.ரீ.எம்.ஹலீம் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக ஈரான் நாட்டின் ஆன்மீக தலைவர் ஆயத்துல்லாஹ் செய்யித் அலி அவர்களின் கிழக்காசிய பிரதிநிதி ஆயத்துல்லாஹ் காஸி கலந்து கொண்டு பலன்தரும் மரக் கன்றுகள் நாட்டி வைத்ததுடன் ஒருவருக்கு ஐயாயிரம் ரூபா வீதம் இருபது வரிய மாணவர்களுக்கு புலமை பரிசிலும் வழங்கி வைத்தார்.

இந் நிகழ்வில் கல்குடா விவசாய அமைப்பு தலைவர் ஐ.எல்.முஸ்தபா பிரதம அதிதிக்கு பொண்னாடை போர்த்தி கொளரவித்தார்.

Related posts

வரவு- செலவுத் திட்டத்துக்கு வாக்களித்தவர்கள் அரசின் பிடிக்குள் இறுகிக் கொண்டார்கள்!

wpengine

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இரத்துச் செய்யப்படும்!-ஜானக்க வக்கும்புர-

Editor

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

Editor