ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையின் 37வது கூட்டத்தொடர் ஜெனீவாவில் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது, பிரதான நிகழ்வுகள் இடம்பெறும் அதே வேளை உப நிகழ்வுகளும் பாதிக்கபட்ட அமைப்புக்களினால் நடாத்தப்படுகிறது.
அந்த அடிப்படையில் அண்மையில் கண்டி – அம்பாறை ஆகிய மாவட்டங்களில் முஸ்லிம்களுக்கெதிராக இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் சிறப்பு அமர்வு ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டது, நிகழ்விற்கு முயீஸ் வஹாப்தீன் தலைமை தாங்கினார்.
நேற்று மாலை 3.00 மணிக்கு ஆரம்பமாகிய இந்த அமர்வில் கலவரம் பற்றிய ஆவணப்படம் திரையிடப்பட்டதோடு சிறப்பு விளக்கங்களும் வழங்கப்பட்டது.
முஸ்லிம்களின் மீது மிலேச்சத்தனமாக தாக்கிய காடையர்களை பார்த்துக்கொண்டிருந்த பாதுகாப்பு படைகயினர் மீத நடவைடிக்கை எடுக்க வேண்டும், அத்தோடு பொலிஸ் மீள் கட்டமைப்பு செய்யப்படவேண்டும் எதிர்காலத்தில் முஸ்லிம்களின் இறைமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், மத வழிபாட்டு தலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் ஐ.நா பிரதிநதிகளிடம் வலியுறுத்தப்பட்டது.
ஐரோப்பிய வாழ் முஸ்லம்களின் பிரதிநிதிகளான முஹ்லிஸ், றஹ்மான், இன்சாப் ஆகியோரும், இலங்கை முஸ்லிம் பிரதிநிதிகளான பஹத் ஏ.மஜீத், சட்டத்தரணி பாயிஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.