உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா வெளியேற்றம்.

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா வெளியேறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா கண்டத்தில் உள்ள நாடுகள் தங்கள் சமூக, பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு ‘ஐரோப்பிய யூனியன்’ என்ற கூட்டமைப்பை உருவாக்கின.

இதில் பிரான்ஸ், ஜேர்மனி, பெல்ஜியம், பிரிட்டன், இத்தாலி, டென்மார்க், போர்ச்சுக்கல் உள்ளிட்ட 28 நாடுகள் இடம்பெற்று உள்ளன.

இதில் உள்ள நாடுகள் தங்கள் நாட்டின் எல்லைகளை பிற உறுப்பு நாடுகளுக்கு திறந்து வைத்துள்ளன. இந்த அமைப்பின் கடைசி உறுப்பு நாடாக 1-7-2013 அன்று குரோசியா சேர்க்கப்பட்டது.

ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் நாடுகளில் வசிப்பவர்கள் அந்த அமைப்பில் உள்ள எந்தவொரு நாட்டுக்கும் சென்று வாழலாம், வேலைவாய்ப்புகளை பெறலாம், கல்வி கற்கலாம், தொழில் தொடங்கலாம்.

இதன் காரணமாக ஐரோப்பா கண்டத்தில் உள்ள பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் பிரிட்டனில் அதிக அளவில் குடியேற தொடங்கினார்கள்.

இதனால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக, குறிப்பாக வேலைவாய்ப்பு பறிபோவதாக பிரிட்டன் மக்கள் கருத தொடங்கினார்கள்.

பிரிட்டன் அரசாங்கம் வழங்கும் சமூக நலத்திட்டங்களின் பலன்களை பிறநாட்டினர் பெற்று விடுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினார்கள்.

மேலும் பிரிட்டனுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாகவும், இதனால் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலக வேண்டும் எனவும் கோரிக்கை நாளுக்கு நாள் வலுத்தது.

இதனையடுத்து மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டு, நேற்று வாக்கெடுப்பு நடந்தது.

தொடர்ந்து நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 382 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டன.

பெரும்பாலான மக்களின் தெரிவு பிரிட்டன் வெளியேறுவதாக இருந்தது, இந்நிலையில் அதிகாரப்பூர்வமாக பிரிட்டன் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டது.625.0.560.320.500.400.197.800.1280.160.95625.0.560.320.500.400.197.800.1280.160.95 (4)625.0.560.320.500.400.197.800.1280.160.95 (1)

Related posts

அரசியல் செல்வாக்கில் 10 வருடத்திற்கு மேல் அரச உத்தியோகத்தர்கள் வவுனியாவில்

wpengine

தவசிகுளத்தில் ஈ.பி.டி.பி உறுப்பினர் வீட்டில் கஞ்சா பாவனை! மாகாண சபை உறுப்பினர் மயூரன்

wpengine

முஸ்லிம்களை கண்டுகொள்ளாத வடமாகாண சபை! புலிகளினால் விரட்டப்பட்டவர்களுக்கு நிதியினை கொண்டுவந்த றிஷாட்

wpengine