கிளிநொச்சிசெய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

ஐந்து நாடுகளின் பெளத்த தேரர்கள் கிளிநொச்சியை வந்தடைந்தனர்..!

உலக சுகந்திரம் வேண்டி திஸ்ஸமகாராம(அம்பாந்தோட்டை) முதல் நாகதீபம் (நயினாதீவு) வரை இலங்கை உட்பட ஐந்து நாடுகளின் பெளத்த தேரர்கள் முன்னெடுத்துள்ள பாதயாத்திரை நேற்று(03.03.2025) கிளிநொச்சியை வந்தடைந்தது.

கிளிநொச்சியை வந்தடைந்த தேரர்களை யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக மாணவர்கள் வரவேற்றனர். வீதியிலிருந்து பல்கலைக்கழக வளாகத்திலுள்ள சரசவி விகாரை வரை மாணவர்கள், விரிவுரையாளர்கள் வரவேற்றனர்.

அவர்கள், இன்றையதினம்(04) கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி தமது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளனர்.

தாய்லாந்து, மியன்மார், இலங்கை, லாகோஸ், இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 50 தேரர்கள் குறித்த பாத யாத்திரையில் கலந்து கொண்டுள்ளனர்

பெப்ரவரி மாதம் 07ஆம் திகதி குறித்த பாதயாத்திரையை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

புலிப் பூச்சாண்டி காட்டும் மஹிந்த

wpengine

தொலைக்காட்சி அரச விருது நிகழ்வில் தேசிய விருது பெற்ற தமிழ் மொழி மூல கலைஞர்கள்

wpengine

இழப்பீட்டு விபரங்களை வெளியிடும் தரப்பினர்கள் எமது வீடுகளுக்கு தீ வைத்தார்கள். தீ வைத்தவர்கள் விபரங்கள் எங்கே ?

Maash