பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

ஐந்து கோடி ரூபா தருகின்றேன் தேர்தலில் போட்டியிட சீட்டு தாருங்கள்!அவலம்

வன்னி தேர்தலில் தொகுதியில் பொதுஜன பெரமூன கட்சியில் போட்டியிடுவதற்கு முசலி பிரதேசயின் முன்னால் தவிசாளர் எஹியா பாய் ஐந்து கோடி பணம் ரூபா தருவதாக முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபஷ்சவுக்கு தூது அனுப்பி இருப்பதாக தகவல் கிடைக்கபெற்றுள்ளன.


இதற்கான தரகராக பேருவளையில் உள்ள  பொதுஜன பெரமூன கட்சியினை சேர்ந்த பிரபல வர்த்தகர் ஒருவரை தொடர்புகொண்டு எஹியா பாய் பேசி இருப்பதாகவும் அதற்காக முன்னால் பாராளுமன்ற உறுப்பினருக்கு  நாமல் ராஜபஷ்சவுக்கு ஐந்து கோடி ரூபா பணம் தருவதாகவும் எஹியா பாய் தூது அனுப்பியுள்ளார்.

ஐந்து கோடி ரூபா பணம் செலவு செய்து தேர்தலில் போட்டியிட வேண்டிய தேவை இந்த எஹியா பாய்க்கு என்ன காரணம் என சமூக சேவையாளர்கள் சிந்திக்கின்றார்கள்.


தேர்தலில் போட்டியிட்டு  5 கோடிகளை செலவு செய்கின்றவர்கள் வெற்றிபெற்றால் மக்களுக்கு சேவை செய்வார்களா? என சிந்திக்க வேண்டும்.

கடந்த இரண்டு மாதகாலமாக ஊடகங்களுக்கு பணங்களை கொடுத்து பொது ஜனபெரமூன கட்சியின் வன்னி மாவட்ட அமைப்பாளர்,முதன்மை வேட்பாளர் என போலியான பொய் பிரச்சாரங்களை முன்னேடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Related posts

ஒன்றிணைந்த தொழிற்சங்க ஏற்பாளர் ஆனந்த பாலிதவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Editor

இலங்கை , இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை வலியுறுத்தி தமிழகத்தில் பாரிய போராட்டம் !

Maash

அமைச்சு பதவிகளை அப்படியே தருகிறோம்! விக்னேஸ்வரன் பக்கம் வாங்க

wpengine