நம் நாட்டை திவாலாக்கிய இந்த ஊழல் அரசுக்கு ஐக்கிய மக்கள் சக்தியினை சேர்ந்த யாரும் செல்லமாட்டார்கள், அதற்கு நான் ஒப்புதல், அனுமதி வழங்கமாட்டேன் என பிபிலேயில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
பிபில மெதகமவில் உள்ள ரஞ்சித் மத்தும பண்டாரவின் இல்லத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தும் போதே செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த ரஞ்சித் மத்தும பண்டார கூறியதாவது:
அரசு செய்த நல்ல பணியை விமர்சிக்க மாட்டோம். வாக்கெடுப்பு நடத்துவோம். மக்கள் தங்களுக்கு விருப்பமான அரசாங்கத்தை தெரிவு செய்கிறார்கள். இன்று பாலகிரி தோசம் போன்று தான் அரசாங்கம் செயல்படுகின்றது.. 40 SJB உறுப்பினர்கள் வருவதாகச் சொன்னார்கள். இப்போது ஒருவர்தான் வருகிறார் என்று சொல்கிறார்கள்.. ராஜிதாவுக்குப் போக எங்களிடம் அனுமதி இல்லை. எப்படியும் போகமாட்டார்.. அந்த ராஜிததான் அரசாங்கத்தில் ஊழலுக்கு எதிராகப் போராடினார். துபாய் வங்கிகளில் ராஜபக்ஷ ஆட்சியின் பணம் உள்ளதுஎன அவர் தான் கூறினார். அரசாங்கத்திற்குச் செல்வதா இல்லையா என்பதை ஒரு கட்சி முடிவெடுக்க வேண்டும் என்றும் தன்னிச்சையாக கூறமுடியாது என்றும் அவரே கூறுகிறார்.
அரசாங்கம் கொண்டு வரும் ஊழலுக்கு எதிரான சட்டமூலத்திற்கு வாக்களிப்போம், ஆனால் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு வாக்களிக்க மாட்டோம், இன்று இந்த நாட்டில் 50% மூன்று வேளை உணவு உண்பதில்லை, 2.5 மில்லியன் மக்கள் வறுமையினாலும் போஷாக்கின்மையினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது ஒரு பெரிய நகைச்சுவை, இந்த அரசாங்கம் சாதி மற்றும் மத இனவாதத்தின் அடிப்படையில் ஆட்சிக்கு வந்தது, ஈஸ்டர் ஞாயிறு அன்று ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தைப் பற்றி என்ன சொல்ல முடியும்..” என்று ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்திருந்தார்.