உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிக்கான தூதுவராக மலாலா நியமனம்

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிக்கான தூதுவராக மலாலா யூசுப்சாய் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தப் பதவியைப் பெரும் அவருக்கு தற்போது 19 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானைச் சேர்ந்த சிறுமியான மலாலா, தலிபான்களின் கொடுமைகளுக்கு எதிராக உரக்கக் குரல் கொடுத்து, சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்தவர்.

இதற்காக, தலிபான்கள் இவரை சுட்டுக்கொல்லவும் முயற்சித்தனர்.

எனினும், அந்த முயற்சியில் மலாலா உயிர் பிழைத்து, தொடர்ந்து பெண் சமூக விடுதலைக்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறார்.

அவரது செயற்பாடுகளைப் பாராட்டி, அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மாம்புரி கடற்கரை பகுதியில் கை , கால் இல்லாத நிலையில் சடலம்

wpengine

நல்லாட்சி அரசாங்கம் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளவில்லை

wpengine

மங்கள சமரவீரவுக்கும் டிலந்த விதானகேயிற்கும் என்ன தொடர்பு?

wpengine