பிரதான செய்திகள்

ஐக்கிய தேசிய கட்சியிடம் இருந்து பரிபோகும் கொழும்பு மாநகர சபை

கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலில் இம்முறை முஸ்லிம் வாக்குகள் பல்முனையில் பிரிந்து செல்லும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகர சபை உருவாக்கப்பட்டது தொடக்கம் அதன் ஆட்சி அதிகாரம் ஐக்கிய தேசியக் கட்சி வசமே இருந்து வந்துள்ளது.

சுதந்திரக் கட்சியின் செல்வாக்கு மிக்க ஜனாதிபதிகளான சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் சகல அதிகாரங்களும் கொண்ட ஜனாதிபதி பதவியில் இருந்த போதும் அவர்களின் ஆட்சிக் காலத்தில் கூட கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை சுதந்திரக் கட்சியினால் கைப்பற்ற முடியாது போனது.
இந்நிலையில் இம்முறை நடைபெறும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் ஐ.தே.க. பெரும் சவாலை எதிர்கொள்ள நேரிடும் என்று கூறப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் தலைமையிலான புதிய கட்சி இம்முறை மிலிந்த ராஜபக்ஷ, சிராஸ் யூனுஸ் போன்ற நட்சத்திர வேட்பாளர் குழுவொன்றை தேர்தலில் களமிறக்கியுள்ளது.

இவர்களில் சிராஸ் யூனூஸ் முஸ்லிம் வாக்குகளில் கணிசமான வாக்குகளை தனிப்பட்ட ரீதியில் மஹிந்த ராஜபக்ஷ சார்பாக திசைமாற்றும் நட்சத்திர அந்தஸ்தைக் கொண்டுள்ளார்.

அத்துடன் மேமன் சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற வகையில் மேமன் சமூகத்தின் வாக்குகளிலும் பெருமளவான வாக்குகளை தன் பக்கம் திருப்பும் சக்தி அவருக்குள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.

மறுபுறத்தில் அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான கட்சி தனித்து களமிறங்கியுள்ளமை, மற்றும் சுதந்திரக் கட்சியின் சார்பில் அசாத் சாலி களமிறங்கியுள்ளமை போன்றவையும் ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்குகளில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

மன்னார் அல்,அஸ்கர் தேசிய பாடசாலையின் பரிசளிப்பு விழா! அரசாங்க அதிபர்,பிரதேச செயலாளர்கள்

wpengine

‘தென்னிலங்கையில் சமாதியாகுமா சிறுபான்மை சித்தாந்தம்? – குழம்புவதும் குழப்புவதும் ஆரோக்கியமற்றதாகின்றது..!’

wpengine

பண்டைய காலந்தொட்டு உலக சமுதாயம் பலவற்றாலும் கொண்டாடப்பட்ட ஒரு விழா -மஹிந்த

wpengine