பிரதான செய்திகள்

“ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார்

 

“ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்று இன்னமும் தீர்மானிக்கவில்லை. இது தொடர்பில் கட்சியின் உயர்பீடமே இறுதி முடிவெடுக்கும்” என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.


இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

“பல வருட அரசியல் அனுபவம்கொண்டவரே ஜனாதிபதி வேட்பாளராகத் தெரிவாக வேண்டும். தகுதியில்லாதவர்கள் ஜனாதிபதி வேட்பாளராகும் கனவு காணக்கூடாது.

எல்லோருக்கும் பதவி ஆசை இருக்கத்தான் செய்யும். ஆனால், தகுதியானவர்களுக்கே அந்தப் பதவி போய்ச் சேர வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்று இன்னமும் தீர்மானிக்கவில்லை.

சிலரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன. ஆனால், இது தொடர்பில் கட்சியின் உயர்பீடமே இறுதி முடிவெடுக்கும். தனிநபர்கள் வேட்பாளர்களைத் தீர்மானிப்பதில்லை” என கூறியுள்ளார்.

Related posts

தேர்தல் காலத்தில் வருகின்ற அரசியல்வாதி நான் அல்ல -அமீர் அலி

wpengine

மன்னார் மாந்தை இரட்டை மாட்டு வண்டி சவாரி

wpengine

20அமைச்சுக்கள் சத்திய பிரமாணம்! றிஷாட் எனக்கு அமைச்சு தேவையில்லை

wpengine