பிரதான செய்திகள்

ஐக்கியப்படுவோம் , பிள்ளைகளிற்காக எதிர்கால சந்ததிக்காக எழுந்துநிற்போம்,


நேற்றைய ஆர்ப்பாட்டத்திற்கு அப்பாவி மக்களின் துயரங்களும் நியாயமற்ற ஒடுக்குமுறையுமே காரணம் என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் சனத்ஜெயசூரிய சமூக ஊடக பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.


அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுங்கள்,பொதுச்சொத்துக்களிற்கு சேதம் விளைவிக்காதீர்கள் உங்கள் சகோதர சகோதரியை காயப்படுத்தாதீர்கள்,இது கலவரம் தொடர்பானது இல்லை,இது எது சரியானதோ அதற்காக குரல் கொடுப்பது.என அவர் தெரிவித்துள்ளார்.


அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

கடந்த ஒரு மாதகாலமாக இலங்கையர்களாகிய நாங்கள் மௌனமாக துயரில் சிக்குண்டுள்ளோம் அனைத்தும்அனைவரும் உடையுநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

நாங்கள் அந்தநிலையை அடைந்துள்ளோம்.


நேற்றைய ஆர்ப்பாட்டத்திற்கு அப்பாவி மக்களின் துயரங்களும் நியாயமற்ற ஒடுக்குமுறையுமே காரணம்.
நாங்கள் ஒருபோதும் மத இன சாதி அரசியல்கட்சி அடிப்படையில் பிளவுபடக்கூடாது.


நாங்கள் ஒரு மக்களாக ஐக்கியப்படுவோம் எங்களுக்காக எங்கள் பிள்ளைகளிற்காக எதிர்கால சந்ததிக்காக எழுந்துநிற்போம்,
இது அவர்களும் நாங்களும் பற்றிய விடயமில்லை, அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுங்கள்,பொதுச்சொத்துக்களிற்கு சேதம் விளைவிக்காதீர்கள் உங்கள் சகோதர சகோதரியை காயப்படுத்தாதீர்கள்,இது கலவரம் தொடர்பானது இல்லை,இது எது சரியானதோ அதற்காக குரல் கொடுப்பது.

Related posts

உற்பத்தி செய்யாத தொழிற்சாலைகள் நாட்டுடமையாக்கப்படும்: வெனிசுவேலா அதிபர்

wpengine

தோழர் பசீரின் மறைக்கப்பட்ட மர்மங்கள். 3வது தொடர்

wpengine

அமெரிக்காவில் இருந்து முதல் மாதத்தில் 37,660 பேரை நாடு கடத்திய டொனால்ட் ட்ரம்ப்

Maash