Breaking
Fri. Nov 22nd, 2024

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

கடந்த பத்து நாட்களாக ஆழ்கடலுக்கு சென்று வீடு திரும்பாத கல்முனையை சேர்ந்த மீனவர்களில் ஏ.பி.ஹாஜா முஹைதீன், எம்.எம்.அர்ஜில் ஆகிய இருவரும் அவர்கள் சென்ற படகும் மாலை தீவு கடற்படையினரால் நேற்று  இரவு (04) காப்பாற்றப்பட்டுள்ளது.

காப்பாற்றப்பட்ட மீனவருடைய மகன் ஒருவரைத் தொடர்பு கொண்ட போது அவர் மேற் கண்டவாறு தெரிவித்தார்.

இது பற்றி மேலும் தெரிவிக்கும் போது,

நானும் கடற்தொழில் சங்க உறுப்பினர் சிலரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கல்முனைத் தொகுதி அமைப்பாளர் ஏ. ஆர். எம். ஜிப்ரியை சந்தித்துப் பேசியதன் மூலம் அவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை அணுகி  எடுத்த தீவிர முயற்சியின் காரணமாக, படகுகள் மூலம் தேடுதல் நடத்தப்பட்டதாகவும் இதில் அமைச்சர்  அமைச்சர் அமீர் அலி மும்முரமாக ஈடுபட்டதாவும் தெரிவித்தார்.

படகில் எரிபொருள் முடிந்து போனதால் 5 நாட்களுக்கு மேல் கடலில் கிடந்தனர். ஒரு படகில், படகில் கட்டும் பாய் இருப்பதால் நாங்கள் பாயைக் கட்டிக் கொண்டு செல்கின்றோம். பின்னால் நீங்களும் வாருங்கள் என்று கூறினர். மற்றப் படகில் இருப்பவர்கள் நாங்கள் மெதுவாக வருகிறோம் நீங்கள் முதலில் செல்லுங்கள் என்ற கூற காப்பாற்றப்பட்ட படகில் இருந்த ஒருவர் நானும் அந்தப் படகில் செல்கிறேன் என பாய் கட்டப்பட்ட படகில் அவரும் ஏறிக் கொண்டார். பின்னர் படிப்படியாக படகு சென்று கண்ணுக்கு தெரியும் வரை சென்று மறைந்து விட்டனர்.

பின்னர் படகில் மெது மெதுவாக வரும் போதுதான் அந்த வழியால் வந்த மாலை தீவு கடற்படையினர் மூலமாக காப்பாற்றப்பட்டதாக தனது தந்தை தன்னிடம் கூறியதாகத் தெரிவித்தார்.

இதேவேளை நேற்று மீன்பிடிச் சங்க தலைவர் மற்றும் உறுப்பினர்கள், காணாமல் போன மீனவர்களின் உறவுக்காரர்கள் ஆகியோர் அமைச்சர் அமீரலியை அவரது அமைச்சில் சந்தித்துப் பேசினர். இதன் மூலம் இன்று காலை முதல் மாலைதீவு கடற்படையுடன் தொடர்பு கொண்டு பேசியதன் மூலமாக மாலை தீவு தேடுதல் பிரிவு தீவிரமாகத் தேடுதலை மேற்கொண்டதன் விளைவாக காணாமல் போன கே.எம்.நஸீருத்தீன், ஏ.எம்.அலாவுதீன், எம்.எம்.வாஹிதீன், அப்துல் வாஹித் ஆகிய நான்கு மீனவர்களும் இன்று மாலை வேளையில் காப்பாற்றப்பட்டு 6 மீனவர்களும் நலமாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவர்களை இலங்கைக்குக் கொண்டு வர அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடை பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *