Breaking
Sun. Nov 24th, 2024

வட மாகாண போக்குவரத்து, கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியில் இருந்து மன்னார் மாவட்டத்தை சேர்ந்த அவசிய தேவையுடையோர்க்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கும் நிகழ்வு நேற்று 02-08-2017 புதன்கிழமை மதியம் 2 மணியளவில் மன்னாரில் உள்ள அமைச்சரது உப அலுவலகத்தில் நடைபெற்றது.

மேற்படி நிகழ்வில் மன்னார் தரவன்கோட்டை, எழுத்தூரில் வசிக்கின்ற ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று மாணவிகள் மன்னார் சித்திவிநாயகர் தேசிய பாடசாலையில் கல்வி கற்கின்றனர், இவர்கள் தமது கல்விநடவடிக்கைகளுக்காக நீண்ட தூரம் செல்வதற்கு பல சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர், அதே போன்று வட்டக்கண்டல் ஆலங்குளத்தை சேர்ந்த ஒருவர் தனது சுயதொழிலை மேம்படுத்துவதற்கு உதவி கேட்டும் கோரிக்கை விடுத்திருந்தார். குறித்த கோரிக்கைகளை கருத்திலேடுத்த அமைச்சர் குறித்த மாணவிகளின் கல்வியினையும், மற்றைய நபரின் சுயதொழிலினையும் ஊக்குவிக்கும் முகமாக குறித்த பயனாளிகளுக்கு துவிச்சக்கரவண்டிகளை வழங்கிவைத்துள்ளார்.

மேலும் குறித்த மாணவி உயர்தரப் பரிட்சையில் தோற்றவிருப்பதனால் நல்லமுறையில் சித்திபெற்று அவரது பாடசாலைக்கும், நமது மாவட்டத்துக்கும் பெருமைசேர்க்கக்கூடிய வகையில் கல்விப்பெறுபேறுகளை எடுக்கவேண்டும் என்றும் அமைச்சர் அவர்கள் அறிவுரை கூறியதோடு தனது முற்கூட்டிய வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *