பிரதான செய்திகள்

ஏறாவூர் YSSC,மருதமுனை ஒலிம்பிக் மோதும் அரை இறுதி ஆட்டம் இன்று

(எம்.ஐ.முபாறக்)
ஏறாவூர் YSSC விளையாட்டுக் கழகம் அதன் 45ஆவது ஆண்டு நிறைவையொட்டி கிழக்கு மாகாணரீதியில் நடாத்தும் மர்ஹூம் யூ.எல்.தாவூத் ஞாபகார்த்த சவால் கிண்ணம் மற்றும் மர்ஹூம் புஹாரி விதானையார் வெற்றிக் கிண்ணத்துக்கான உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் முதலாவது அரை இறுதி ஆட்டம் YSSC மற்றும் மருதமுனை ஒலிம்பிக் அணிகளுக்கிடையில் நேற்று ஞாயிறு பிற்பகல் 4 மணிக்கு ஏறாவூர் அஹம்மட் பரீத் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

முன்னதாக YSSC அணிக்கும் கல்முனை லக்கி ஸ்டார் அணிக்கும் இடையில் இடம்பெற்ற காலிறுதிப் போட்டியில் YSSC அணி 4-0 என்ற அடிப்படையில் கோல்களைப்  போட்டு அரை இறுதி இறுதி ஆட்டத்துக்குத் தெரிவானது.

அந்தப் போட்டியில் YSSC அணியின் சார்பில் எம்.முஷ்தாக் மூன்று கோல்களையும் வி.டி.மிர்ஸாத் ஒரு கோ லையும் அடித்து அணிக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.இந்தச் சுற்றுப் போட்டிக்கு சரீப் அலி மன்றத்தின் தலைவர் வை.எல்.மன்சூர் அனுசரணை வழங்குகின்றார்.

Related posts

மின் தடையா? அவசர அழைப்பு புதிய இலக்கம் 1987

wpengine

அமைச்சர் றிஷாட்டை சிறைக்கு அனுப்பவும் தயங்கமாட்டோம் சிங்கள அரசியல்வாதி

wpengine

மன்னார்,முள்ளிக்குளத்தில் மரக்கடத்தல்

wpengine