பிரதான செய்திகள்

ஏறாவூர் கூட்டுறவு வைத்தியசாலையில் ஏற்பாட்டில் நீரிழிவு முகாம்

(அனா)
உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு ஏறாவூர் கூட்டுறவு வைத்தியசாலையின் ஏற்பாட்டில் நீரிழிவும், நீரிழிவு சார்ந்த நோய் தொடர்பான இலவச வைத்திய ஆலோசனையும் பரிசோதனையும்  ஞாயிற்றுக்கிழமை ஏறாவூர் கூட்டுறவு வைத்தியசாலையில் இடம்பெற்றது.

ஏறாவூர் பல நோக்கு கூட்டுறவு சங்க பொது முகாமையாளர் எம்.எல்.ஏ.லத்தீப் தலைமையில் இடம் பெற்ற வைத்திய ஆலோசனை நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணரும் நீரிழிவு வைத்திய நிபுணருமான டாக்டர் எம். முருகமூர்த்தி கலந்து கொண்டு வைத்திய ஆலோசனையையும் நீரிழிவு தொடர்பான பரிசோதனையையும் நடாத்தினார்.unnamed-2

இவ் வைத்திய முகாமிற்கு நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டதுடன் அறுபது பேர் நீரிழிவு தொடர்பான பரிசோதனை செய்து கொண்டதாக ஏறாவூர் பல நோக்கு கூட்டுறவு சங்க பொது முகாமையாளர் எம்.எல்.ஏ.லத்தீப் தெரிவித்தார். unnamed-1

Related posts

தையல் இயந்திரங்களை வழங்கி வைத்த சல்மா அமீர் ஹம்ஸா

wpengine

அடிப்படை உரிமைகளில் ஆழ ஊடுருவும் PTA

wpengine

“யாழில் நிகழ்ந்த குற்றம், விசாரிக்கும் அதிகாரம் கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு இல்லை” 16 தமிழ் இளைஞர்கள் விடுதலை.

Maash