உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

ஏஞ்சலினா ஜோலியாக மாற நினைத்த 19வயது பெண்ணின் அவல நிலை

ஏஞ்சலினா ஜோலி போன்று அழகாக மாற ஆசைப்பட்டு 50 தடவை பிளாஸ்டிக் சர்ஜரி செய்த 19 வயது இளம்பெண் அகோரமாக மாறியுள்ளார். 

ஈரானை சேர்ந்த இளம்பெண் சாகர் தாபர் (19). பார்ப்பதற்கு அழகாக இருப்பார்.

இருந்தாலும் அவருக்கு அமெரிக்க நடிகை ஏஞ்சலினா ஜோலி போன்று தனது முக அழகை மாற்ற வேண்டும் என விரும்பினார்.

அதற்காக அவர் தனது முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி (மாற்று அறுவை சிகிச்சை) செய்தார். இருந்தாலும் அவருக்கு திருப்தி ஏற்படவில்லை.

எனவே 50 தடவை முகமாற்று சத்திர சிகிச்சை செய்து கொண்டார். ஆனால் ஏஞ்சலினா ஜோலி போன்று முகம் மாறவில்லை. மாறாக அழகாக இருந்த முகம் அகோரமாக அவலட்சணமாக மாறி விட்டது.

இருந்தாலும் தனது முக அழகை இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பலவிதமான ‘போஸ்’களில் வெளியிட்டு திருப்திபட்டு வருகிறார். இவரை 4 இலட்சத்து 80 ஆயிரம் பேர் பின் தொடர்கிறார்கள்.

அவர்கள் சாகர் தாபரின் முக அழகு குறித்த தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அவரது முகம் பிசாசு போன்று இருப்பதாகவும், பிணம் போன்று காட்சி அளிப்பதாகவும் வர்ணித்துள்ளனர்.

Related posts

காலாவதியான கண்ணீர்ப் புகைக் குண்டுகளை அப்புறப்படுத்த கோபா குழு பொலிசாருக்கு அறிவுறுத்தல்!

Editor

அரசாங்கத்தின் தீர்க்கதரிசனம் அற்ற செயற்பாடுகளால் சோமாலியாவைப் போல பஞ்சம் ஏற்படலாம்.

wpengine

இதுவே என் கடைசி உரையாகக்கூட இருக்கலாம்: ஃபிடல் கெஸ்ட்ரோ உணர்ச்சிகர உரை

wpengine