பிரதான செய்திகள்

எவரஸ்ட் மலை ஏறிய இலங்கை பெண்! பிரதமர் வாழ்த்து

உலகில் மிக உயரமான எவரஸ்ட் மலையில் ஏறிய முதலாவது ஸ்ரீலங்கா பெண்ணாக ஜெயன்தி குருஉதும்பலா சாதனை படைத்துள்ளார். இன்று காலை எவரஸ்ட் மலையின் உச்சிக்கு இவர் சென்றடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஸ்ரீலங்காவை பிரதிநிதித்துவப்படுத்தி எவரஸ்ட் மலை ஏறிய பெண்ணாக அவர் வரலாற்றில் இடம் பிடித்துள்ளார்.

அத்துடன் ஜெயன்தி குருஉதும்பலாவுடன் சேர்ந்து எவரஸ்ட் மலை ஏறுவதற்கு சென்ற யோஹான் பீரிஸ் இறுதி கட்டம் வரை சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.JayanthiKuru

இவர்கள் இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் முதல் எவரஸ்ட் மலையை அண்மித்த இடத்தில் பல்வேறு பயிற்சிகளை பெற்று இந்த பயணத்தை மேற்கொண்டனர்.

இதேவேளை, எவரஸ்ட் மலை உலகில் மிகவும் உயரமான மலை என்பதுடன், கடல் மட்டத்தில் இருந்து 29,029 அடி உயரமானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் எவரஸ்ட் மலையில் ஏறி சாதனை படைத்த ஜெயன்தி குருஉதும்பலாவிற்கு பிரதமர் ரணில் விக்ரம சிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அத்துடன் எவரஸ்ட் மலையை ஏற முயற்சிக்கும் ஏனைய ஸ்ரீலங்கா பிரஜைகளுக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.JayanthiKuru 01

Related posts

இடம்பெயர்ந்தோருக்கு வாக்காளராக பதிவுசெய்ய நடவடிக்கை.

wpengine

மாணவர்கள் கல்வி துறையில் ஆர்வம் காட்ட வேண்டும் மன்னார் நகர தவிசாளர் முஜாஹிர் கோரிக்கை

wpengine

தகவல் தெரிந்தால் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அறிவிக்க வேண்டும்

wpengine