விக்னேஸ்வரன் ஐயா! அவர்களுக்கும், முப்பதினாயிரம் மக்களுக்கும் தனித்தனியாக முகம் கொடுத்து சிரம்தாழ்த்த முடியாத காரணத்தினால் அனைவரையும் ஒட்டுமொத்தமாக சிரம்தாழ்த்தி வணங்குகிறேன்.
இன்று மக்களுடைய சரித்திரத்திலே ஒரு மிகப்பெரிய சாதனையென்றே கூறவேண்டும், நிகழ்த்தப்பட்டிருக்கின்றது. தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக மிகப் பெரிய அளவிலே தங்களுடைய அடிப்படை உரிமைகளை என்றுமே விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என்பதை மிகத் தெளிவாக மிக உரத்த குரலிலே கூறியிருக்கின்றார்கள்.
எவ்வளவோ இன்னல்களுக்கு மத்தியிலும் இந்த சுட்டெரிக்கும் வெய்யிலிலும் இங்கு நீங்கள் கூடியிருக்கின்றீர்கள் என்றால் நிச்சயமாக உங்களுடைய குரல்கள், சர்வதேசத்திற்கும், ஐக்கிய நாடுகள் சபைக்கும், அரசுக்கும் மிகத் தெளிவாகக் கேட்கும். எங்களுடைய அடிப்படை நியாயபூர்வமான உரிமைகளை வென்றெடுக்கும்வரை ஏறக்குறைய 60 வருடங்களாக சாத்வீகத்தில், ஆயுதத்தில் போராடிவந்த நாங்கள் மீண்டும் மக்களுடைய பேராதரவுடன் தொடர்கின்ற இந்தப் போராட்டம் ஒரு நியாயமான வெற்றியைக் கொடுக்கும்.
அப்படியான ஒரு வெற்றியை எடுப்பதன்மூலம்தான் ஆயிரக்கணக்கான தங்களுடைய உயிர்களைத் தியாகம் செய்த அனைத்தியக்க போராளிகளுக்கும், பொதுமக்களுக்கும் நாங்கள் மிகப்பெரிய அஞ்சலியை செலுத்தியவர்களாக இருப்போம்.
அதை நாங்கள் எல்லாரும் தொடர்ந்து சென்று செய்வோம் என்றுகூறி விடைபெறுகின்றேன். நன்றி வணக்கம்.