பிரதான செய்திகள்

எழுக தமிழ் பேரணியூடாக தற்போது இனவாதம் துண்டிவிடப்படுகின்றது-உதய கம்மன்பில

எழுக தமிழ் பேரணியூடாக தற்போது இனவாதம் துண்டிவிடப்படுகின்றதுடன் தமிழ் மக்களும் தூண்டுதல்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர் என  தூய்மையான ஹெல உறுமைய அமைப்பு தெரிவிக்கின்றது.

 

எழுக தமிழ் உள்ளிட்ட பேரணிகளை நடத்தி வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் தூண்டி விடப்படுகின்றனர். அதனை பொருட்படுத்தாமல் நல்லாட்சி அரசாங்கம் புலிகளின் மீள் உருவாக்கத்திற்கு வலுச்சேர்த்துக்கொண்டிருக்கின்றது.

அன்று நாட்டினை பிளவுபடுத்துகின்ற நோக்கத்தில் செயற்பட்டவர்கள் இன்றும் அவ்வாறே செயற்படுகின்றனர்.

தற்போதைய அரசாங்கம் புலிகளை பாதுகாத்து அவர்களின் மீள் ஊருவாக்கத்திற்கு சக்தி வழங்கிக்கொண்டுள்ளது மறுபுறத்தில் இராணுவத்தினை தண்டிக்க முன்னெடுப்கபுளை மேற்கொண்டு வருகின்றது.

தற்போது வடக்கில் வெளிநாடு மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கிளைமோர் குண்டுகளுடன் சிலர் கைதாகின்றனர். அவர்களுக்கும் தற்போது மன்னிப்பு வழங்கப்படுகின்றது ஆனால் இராணுவத்தினர் மட்டும் தண்டிக்கப்படுகின்றனர்.

வடக்கு, கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழ் மக்களை தூண்டிவிட்டுக்கொண்டிருப்பவர்கள் தான் இராணுத்தினர் வடக்கிலிருந்து அனுப்பட வேண்டும் என்றும் வடக்கிற்கு இராணுவம் அவசியப்படாது என்றும் கூறுகின்றனர்.

தூய்மையான நாளைக்கான அமைப்பின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே பாராளுமன்ற உறுப்பினரும் தூய்மையான ஹெல உறுமைய அமைப்பின் தலைவருமான உதய கம்மன்பில மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

திங்கள் கிழமை அமைச்சரவை கூட்டம்! இன்று மாற்றம்.

wpengine

தவத்தை வைத்துக்கொண்டு மு.கா.கட்சி எப்படி செயற்பட்டது என்று அறியமுடியும்.

wpengine

கந்தளாய் வீதியிலுள்ள 5 வர்த்தக நிலையங்களில் கொள்ளை

wpengine