பிரதான செய்திகள்

“எழுக தமிழ்” எழுச்சி பெற! பா.டெனிஸ்வரன் அழைப்பு

எதிர் வரும் சனிக்கிழமை 24-09-2016 அன்று நடைபெறவுள்ள ‘எழுக தமிழ்’ பேரணிக்கு வடக்கின் சகல கிராம மட்ட அமைப்புகள், பொதுமக்கள், நலன்புரி சங்கங்கள் அனைவரும் பூரண ஆதரவு வழங்கி எமது உரிமைகளுக்கு உயிரூட்டும் வண்ணம் பேரணியில் கலந்துகொண்டு “எழுக தமிழ்”   எழுச்சி பெற அனைவரும் ஒன்றுதிரள்வோமென அமைச்சர் டெனிஸ்வரன் அவர்கள் அழைப்புவிடுத்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக அமைச்சர் தனது கருத்தை தெரிவிக்கையில் ‘எழுக தமிழ்’ எம்மொவ்வொருவருடைய  உண்மையுள்ள உயர்ந்த எண்ணங்களாலும், உணர்வுகளாலும்  எழுச்சியுள்ளதாக மாற, மாகாணத்தின் முடியுமான அனைத்து பொதுமக்களும் கலந்துகொண்டு பேரணியை உயிரூட்டமுள்ளதாக ஆக்குமாறு தனது ஊடக அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் இது தமிழர்களாகிய எமது தலையாய கடமை என்பதை உணர்ந்துகொண்டு சிறையில் வாடும் எம் தமிழ் அரசியல் கைதிகள்  விடுதலைபெறவும், கடந்த யுத்த காலத்தின்போது இராணுவத்தால் அபகரிப்பு செய்யப்பட்ட  நிலங்கள் விடிவிக்கப்படவும், எமது தமிழினமும் சகல விடயங்களிலும் சமமான அந்தஸ்துள்ள இனமாக மதிக்கப்படவும், காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளது நிலை குறித்து அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாக ஓர் தெளிவான முடிவை பெறுவதற்கும், எமது தமிழ் பேசும் மக்கள் சகல உரிமைகளையும் பெற்றுக்கொள்ளவும், கடந்த கால எமது உயிர் இழப்புக்களுக்கு அர்த்தம் தேடவும்,  இலங்கை அரசிற்கும் சர்வதேசத்திற்கும் எமது பிரச்சினைகளை ஒட்டுமொத்தமாக எடுத்துக்காட்டவும் “எழுக தமிழ்” எழுச்சி பேரணியை அனைவரும் ஒற்றுமையாக பயன்படுத்திக்கொள்வோம் என அறிவித்துள்ளார்.

Related posts

சம்பந்தனும், சுமந்திரனும் இனவாதத்தை தூண்டுகின்றனர்.

wpengine

உப்பு கூட்டுதாபன அபிவிருத்திகளை ஆரம்பித்த அமைச்சர் றிஷாட் (படம்)

wpengine

இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம் பழத்திற்கு எவ்வித வரியும் அறவிடப்பட மாட்டாது: நிதி அமைச்சு

wpengine