பிரதான செய்திகள்

எல்லை நிர்ணய வர்த்தமானி அறிவித்தல் 8ஆம் 9ஆம் திகதி

எல்லை நிர்ணயங்களை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல், 8ஆம் திகதி அல்லது 9ஆம் திகதி வெளிவரும் எனவும் இதனால், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துவதற்கான வழி பிறக்குமெனவும், தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த உறுதிமொழிகளை, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கு வழங்கியுள்ளார். எல்லை நிர்ணய மீளாய்வுக் குழுவால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் மொழிபெயர்ப்பில் காணப்படும் பிழைகள் திருத்தப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய தேர்தல் முறையின் கீழ் தெரிவுசெய்யப்படவுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல், அடுத்த வர்த்தமானியில் வெளியாகுமென, தனக்கு உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளதாக, மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

விகிதாசாரப் பிரதிநிதித்துவம் மற்றும் கூடிய வாக்கு பெற்றவர் வெல்லும் முறை என்பன கலந்த புதிய முறையிலேயே, கூடுதல் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர் என்றும் அவர் குறிப்பிட்டார். “புதிய தேர்தல் சட்டத்தில், 50 வரையிலான குறைபாடுகளை நாம் கண்டோம். அவை, சிறிய தவறுகளாக இருப்பினும், திருத்தப்படல் வேண்டும். சில இடங்களில், சிங்கள மொழிப்  பிரதிகளுக்கும் ஆங்கில மொழிப் பிரதிகளுக்கும் இடையே வித்தியாசங்கள் உள்ளன.

இவ்வாறு முரண்பாடுகள் காணப்படுமிடத்து சிங்கள மொழிபெயர்ப்பே வலுவானது. சட்ட வரைஞர் திணைக்களம் இந்த விடயத்தை கவனிக்க வேண்டும்” என, அவர் கேட்டுக்கொண்டுள்ளா​ர்.

Related posts

விரைவில் முன்னால் அமைச்சர்களுக்கு ஆளுநர் பதவி கிடைக்கும் வாய்ப்பு

wpengine

யாழ்-அங்கஜன் வைத்த பெயர் பலகையினை அகற்றிய தவிசாளர்

wpengine

மூன்று மாடி பலநோக்குக் கட்டிடம் அடிக்கல் நாட்டிய முன்னால் அமைச்சர்

wpengine