புலம்பெயர்ந்த தாயக உறவுகளினால் உதவி வழங்கும் செயற்திட்டத்தின்கீழ் வவுனியா கோவில்குளம் சிவன் ஆலயத்தின் எல்லப்பர் மருதங்குளம் முதியோர் இல்லத்துக்கு இன்று (25.04.2017) செவ்வாய்க்கிழமை ரூபாய் 15,000/- நிதியினூடாக விசேட மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது.
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் சுவிஸ் கிளை உறுப்பினர் திரு. விஜயநாதன் ரட்ணகுமார் அவர்கள் தனது தந்தையாரான வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் ஓராண்டு நினைவுதினத்தை முன்னிட்டு முதியோர்க்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக்கொடுப்பதற்காக அனுப்பிவைக்கப்பட்ட நிதியிலிருந்து மேற்படி உதவி வழங்கப்பட்டுள்ளது.