செய்திகள்பிரதான செய்திகள்

எரிபொருட்களை பதுக்கி வைக்கும் செயற்பாடுகளை நிறுத்தி, அரசாங்கத்திற்கு உதவி செய்யுமாறு கோரிக்கை.

அளவுக்கு அதிகமாக எரிபொருட்களை பதுக்கி வைக்கும் செயற்பாடுகளை நிறுத்தி அரசாங்கத்திற்கு உதவி செய்யுமாறு பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலை காரணமாக எதிர்காலத்தில் பெட்ரோலிய விலைகள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக சங்கத்தின் துணைத் தலைவர் குசும் சந்தனாயக்க தெரிவித்தார்.

இவ்வாறான போர் சூழல் ஏற்பட்டால் எரிபொருள் இல்லாமல் போகாது. விலைகளில் மட்டுமே மாற்றம் ஏற்படும்.

இது எங்களுடைய பிரச்சினை அல்ல. உலகின் சக்திவாய்ந்தவர்களின் பிரச்சினையாகும். எரிபொருள் கொள்வனவு செய்யும் முழுமையான நடவடிக்கை அரசாங்கத்தின் கைகளில் உள்ளது.

இதனால் அளவுக்கு அதிகமாக எரிபொருட்களை பதுக்கி வைக்கும் செயற்பாடுகளை நிறுத்தி அரசாங்கத்திற்கு உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அடுத்த சில மாதங்களுக்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் ஏற்கனவே செய்து வருகின்றது.

அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களின்படி மட்டுமே வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் துணைத் தலைவர் குசும் சந்தனாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனின் இனவாதத்தின் உச்சகட்டம்

wpengine

30 மேற்பட்ட இலங்கை முஸ்லிம்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் டிலாந்த விதானகே

wpengine

பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் ஜூன் 7 ஆம் திகதி வரையில் நீடிப்பு

wpengine