பிரதான செய்திகள்

எம்.எச்.எம்.அஷ்ரப்க்கு பிறகு இறக்காகம் மக்களுக்கு சேவை செய்ய அமைச்சர் றிஷாட்

(நவூபர் மௌலவி)

அண்மையில் அம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேசத்தில் கந்தூரி உணவு நஞ்சாகிய விவாகரத்தில் பலர் பாதிப்படைந்தனர். இதில் மூவர் மரணமடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. அந் நேரத்தில் விசேட வானூர்தி மூலம் இறக்காமம் வந்தடைந்த அமைச்சர் றிஷாத், உடனடியாக தேவைப்பட்ட மருத்துவ உதவி உள்ளிட்ட பலதரப்பட்ட உதவிகளை மேற்கொண்டிருந்தார். அதன் போது மரணிக்கப்பட்ட மூன்று குடும்பங்களுக்கும் வீடு கட்டுவதற்குரிய உதவிகளை செய்வதாகவும் வாக்குறுதி அளித்திருந்தார்.

தான் வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் 2017.10.22ம் திகதி அமைச்சர் றிஷாத்தின் நேரடி பிரதிநிதியாக இறக்காமம் சென்ற, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளரும், அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைவர் சிராஸ் மீராசாஹிபினால் முதற்கட்டமாக மூன்று குடும்பங்களுக்கும் தலா ஒரு இலட்சம் ரூபாய் பணம் வழங்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இன்னும் இரண்டு கட்டங்களில் மொத்தம் எட்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான உதவிகளை செய்ய அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் அமைச்சர் றிஷாத் உறுதியளித்துள்ளார்.

வாக்குறுதிகள் என்பது காற்றில் எழுதிய எழுத்துக்கள் போல் பறக்கும் இக் காலத்தில், தான் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றிய ஒரு தலைவராக அமைச்சர் றிஷாதை பார்க்கலாம்.

மறைந்த மாமனிதர் அஷ்ரபிற்கு பிறகு இறக்காம பிரதேச மக்களுக்கு இப்படியான சேவைகளை வழங்கும் ஒரே ஒரு தலைவராகவும் அமைச்சர் றிஷாதே உள்ளார். அமைச்சர் றிஷாதுக்கு ஊர் மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளதோடு எதிர்காலத்தில் இது போன்ற சேவைகளை தொடர வேண்டுமெனவும் வேண்டிக்கொள்கிறேன். அத்தோடு இறக்காம மக்களும் அமைச்சர் றிஷாதின் சேவைகளை நினைவு கூர்ந்து பூரண விசுவாசத்துடன் இருப்பது கடமையாகும்.

அமைச்சர் றிஷாத்துக்கும் முன்னாள் கல்முனை மேயர் ஸிராஸ் மீராஸாஹிபுக்கும் இடையில் முறுகல் நிலை காணப்படுவதாக ஊடகங்கள் கூறிய நிலையில், குறித்த ஊடக வதந்திக்கு இந் நிகழ்வினூடாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளமையும் இந் நிகழ்வின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். மேலும், குறித்த நாள் கட்சியின் வளர்ச்சி தொடர்பான பல விடயங்கள் ஆராயப்பட்டதோடு முக்கிய விடயங்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றிஷாத் பதியூர்தீனுக்கு கொண்டு செல்லப்பட்டு தீர்த்து தரப்படும் என்ற உறுதி மொழியும் கட்சியின் பிரதி அமைப்பாளர் ஸிராஸ் மீராஸாஹிபினால் வழங்கப்பட்டது.

Related posts

உலக சந்தையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து

wpengine

மன்னார் மாவட்ட கல்வி அதிகாரிகளால் புறக்கணிக்கப்பட்ட முசலிப்பிரதேசம்.

wpengine

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வு! சரத் பொன்சேகாவும் பங்கேற்பு!

wpengine