அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

எமது வேட்பாளர்கள் போலியாக, கலாநிதி என பெயர் குறிப்பிட்டு போஸ்டர் ஒட்டவில்லை.

எமது வேட்பாளர் பட்டியலில் கலாநிதிகள் இல்லை. நாம் போலியாக கலாநிதி என பெயர் குறிப்பிட்டு போஸ்டர் ஒட்டவும்வில்லை என ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில், ஆலும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றம் வந்த பின்னரே அவர்களுக்கு கலாநிதி பட்டமும் இல்லை, பேராசிரியர் பட்டமும் இல்லை என்பது தெரியவந்தது.

எம்மை திருடர்கள் என்றார்கள், கமிஷன் எடுத்த காசோலை இலக்கம் மற்றும் வங்கி கணக்குகள் பற்றி தெரியும் என்றார்கள், 300 க்கும் அதிகமான பைல்கள் இருப்பதாக கூறினார்கள். ஆனால் எந்த குற்றச்சாட்டையும் நிரூபிக்க முடியவில்லை. பொய் நீடிக்காது பொய்யர்களின் ஆட்சி நீடிக்காது என அவர் கூறினார்.

Related posts

உருகுவே இராச்சியத்தை தாக்கிய சூறாவளி (படம்)

wpengine

4 கோடியே 75 இலட்சம் ரூபா பெறுமதியான 4 வலம்புரிச் சங்குகளுடன் வவுனியா ஒருவர், உற்பட மூன்று பேர் கைது.!

Maash

மொஹமட் ஷாபி 20 ஆம் திகதிக்கு முன்னர் குற்றவியல் விசாரணை திணைக்களத்திடம்

wpengine