Breaking
Thu. Nov 21st, 2024
(அஸீம் கிலாப்தீன் )
எமது ஊரில் இருக்கும் ஒருவருக்கு நாம் வாக்குகளை அள்ளி வழங்கினால் கூட அவரிடம் இருந்து சில சேவைகளை பெற்றுக்கொள்ள நாம் எவ்வளவு சீரழிந்து திரியவேண்டும் என்பதை நாம் அறிவோம். இப்படி இருக்கையில் எமது ஊரை விடுத்து வேறு பிரதேசத்தில் இருக்கும் ஒருவரை பிரதிநிதியாக்கி நாம் நமது தேவைகளை எவ்வாறு நிறைவேற்றிக்கொள்ள போகிறோம்? வட்டாரத்தேர்தல் அறிமுகமானதே எம்மை பகடக்காய்களாக பயன்படுத்தி எமது வாக்குகளை சூறையாடி தன்னையும் தன் ஊரையும் மட்டும் விருத்தி செய்துகொண்டு இவ்வளவு காலமும் அரசியல் செய்து வந்த அரக்கர்களை அடியோடு அழிக்கவே. அதாவது எமது ஊரில் இருக்கும் ஒருவரையே எமது பிரதிநிதியாக்கி எமது ஊருக்குத் தேவையானவற்றை அவரை வைத்து செய்துகொள்வதற்கே.  காரணம் எமது ஊருக்கு தேவையானவை என்னவென்று எமது ஊரானுக்கே தெரியும். அதேபோல் எமது ஊர் சார் பிரச்சனைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற அக்கறை எமது ஊரான் ஒருவனுக்கே இருக்கும்.

எக்கட்சியில் போட்டியிடுபவராயினும் எமது ஊரில் இருந்துதான் எமக்கு ஒரு தலைமைத்துவம் வேண்டும். அவ்வாறு வந்தால் தான் நாம் நமது தேவைகளையும் உரிமைகளையும் அவரிடம் சென்று தைரியமாக கேட்க முடியும். ஊரான் என்ற அடிப்படையில் அவரும் எமக்கு செய்தாக வேண்டும். இல்லையேல் நாம் அவருடன் முரண்படலாம். வேறு ஊரில் இருக்கும் ஒருவரை எமது பிரதேசம் சார்பாக தெரிவு செய்து விட்டு நாம் எவ்வாறு அவரிடம் சென்று எமது தேவைகளையும் உரிமைகளையும் பெற்றுக்கொள்வது? சற்று சிந்தியுங்கள் மக்களே. இவ்வளவு காலமும் அவ்வாறுதானே நடந்தது. ஏதேனும் மாற்றங்கள் எமது ஊரில் நடைபெற்றிருக்கின்றதா? அரசாங்கமே உணர்ந்து விட்டது உனது ஊருக்கு தேவையானதை உனது ஊரில் இருக்கும் ஒருவனால் தான் செய்ய முடியும் என்று. அதனால்தான் வட்டாரத்தேர்தலை அறிமுகம் செய்துள்ளது. அரசாங்கமே அறிந்த பின் நாம் இன்னும் மடையர்களாக இருக்க வேண்டுமா?

எமக்கு மாற்றங்கள் தேவை என்றால் நாம் நம்மை மாற்றவேண்டும். அதாவது நாம் நம்மை இற்றைப்படுத்திக்கொள்ளவேண்டும். பழங்கால அரசியல் இனிமேலும் செல்லுபடியாகாது என்பதை நாம் உணர்ந்து அதற்கு முற்றுப்புள்ளி வைத்துக்காட்ட வேண்டும். நம்மையும் நமதூரையும் விருத்தியடைய செய்து நமதுரிமைகளை வென்றெடுக்க வேண்டுமானால் நாம் நம்மிலிருந்தே ஓர் தலைமையை தெரிவு செய்ய வேண்டும். கட்சி பேதம், பொறாமை, பிடிவாதம் என்பவற்றை திறந்து சிந்தித்து செயல்பட்டு இம்முறை உங்கள் அடிப்படை உரிமையான வாக்குகளை பயனுள்ளவையாக மாற்றி, மாற்றத்தை கொண்டு வாருங்கள் மக்களே. நமக்கு தேவையானவற்றை நாமும் நம்மில் ஒருவனாலும் மட்டுமே செய்ய முடியும். வெளியில் இருக்கும் ஒருவனால் ஓரளவு செய்ய முடிந்தாலும் எம்மை அவரால் திருப்திப்படுத்த முடியாது.

இம்முறை வாக்குகளை வழங்குமுன் சற்று சிந்திப்போம். எமது கட்சி சார் பிடிவாதங்களா? எமது உரிமைகளா? இதில் எது நம்மை முன்னேற்ற வழிவகுக்கும். சிந்திப்போம் செயல்படுவோம்
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *