பிரதான செய்திகள்

எமது நல்ல பண்பாடுகளின் மூலமாவே எமக்கெதிரான எதிர்புக்களை வென்றெடுக்க முடியும்-ஷிப்லி பாறுக்

(எம்.ரீ. ஹைதர் அலி)

முஸ்லிம்களாகிய எங்களுடைய செயற்பாடுகள் அனைத்தும் இஸ்லாமிய மார்க்கத்தினை மையப்படுத்தியதாகவே அமைய வேண்டும். இன்று எமது சமூகத்தைச் சார்ந்தவர்களிடத்திலே இஸ்லாமிய பண்பாடுகள் இல்லாமல் போயுள்ளமையே நாட்டில் தற்போது முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்றுவரும் பல்வேறு செயற்பாடுகளுக்கான பிரதான காரணமாக அமைந்துள்ளது. என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்தார்.

பிறைந்துறைச்சேனை றவ்லதுல் அத்பால் லிதாலிமில் குர்ஆன் மக்தப்பிரிவினால் மக்தப் மாணவர்களின் மூன்றாவது ஆண்டு பூர்த்தி விழாவும், முஅல்லிம்கள் கௌரவிப்பு நிகழ்வும் 2017.02.18ஆந்திகதி-சனிக்கிழமை, பிறைந்துறைச்சேனை அஸ்ஹர் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் அதன் பணிப்பாளர் அஷ்-ஷெய்க் J. அலாவுதீன் (பின்னூரி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய போதே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

அங்கு தொடர்நது உரையாற்றுகையில்…

முஸ்லிம்கள் என்ற வகையில் எமது கல்வி, பொருளாதாரம், அரசியல் சார்ந்த எந்த விடயங்களாக இருந்தாலும் இஸ்லாமிய வரைமுறைகளுக்குற்பட்டதாகவே அமைய வேண்டும்

தற்போதைய சூழ்நிலையில் அரசியல் அதிகாரங்களின் மூலமாகவோ அல்லது ஆயுத போராட்டங்களின் மூலமாகவோ எமக்கு எதிரான எதிர்ப்புக்களை வேன்றெடுக்க முடியாது. மாறாக எமது நல்ல பண்பாடுகளின் மூலமாவே எமக்கெதிரான எதிர்புக்களை வென்றெடுக்க முடியும். அந்த வகையில் முஸ்லிம்கள் என்பவர்கள் சிறந்தவர்கள் என்ற நம்பிக்கை ஏனைய சமூகத்தினருக்கு ஏற்பட வேண்டும்.

அத்தகைய சிறந்த ஒழுக்கமுள்ள இஸ்லாமிய பண்பாடுகளுடன் கூடிய சமூகமொன்றை கட்டியளுப்புவதற்கு எமது சிறார்களை சிறுவயது முதல் மார்க்கக்கல்வியுடன் கூடியவர்களாக வளர்க்க வேண்டிய பொறுப்பு எமக்கு காணப்படுகின்றது. வெறுமெனே ஒரு பந்தையத்தில் ஓடுவதைப்போன்று போட்டி போட்டுக்கொண்டு எமது பிள்ளைகளுக்கு உலகலாவிய கல்வியினை மாத்திரம் முன்னுரிமைப்படுத்தி வழங்குவதற்கு மாறாக அவர்களுக்கு மார்க்கக் கல்வியினை முறையான விதத்தில் பெற்றுக்கொடுப்பதற்கு ஒவ்வொரு பெற்றோரும் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.

மேலும், அந்த வகையில் பல்வேறு தியாகங்களுக்கு மத்தியில் உருவாக்கப்பட்டு ஒரு பொதுவான பாடத்திட்டத்தினூடாக இன்று நூற்றிற்கும் அதிகமான மாணவர்களைக் கொண்டதாக மிகச் சிறந்த விதத்தில் செயற்படுத்தப்படும் றவ்லதுல் அத்பால் லிதாலிமில் குர்ஆன் மக்தப் பிரிவின் செயற்பாடு மிகவும் பாராட்டத்தக்கதாகும் என தெரிவித்தார். 

பிறைந்துறைச்சேனை றவ்லதுல் அத்பால் லிதாலிமிலில் குர்ஆன் மக்தப்பரிவில் கற்பிக்கும் உலமாக்கள், நிருவாக சபை உறுப்பினர்கள், மக்தப்பிரிவினை பூர்த்திசெய்த மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Related posts

உள்ளூராட்சி மன்ற தேர்தல்! திருத்தம் நிறைவேற்றம்

wpengine

வாட்ஸ் ஆப், தரவுகளை பேஸ்புக்கிற்கு அளிப்பதால் வாட்ஸ் ஆப் பயன்படுத்தவேண்டாம்

wpengine

மனித சுதந்திரத்தையும், நாட்டின் அபிவிருத்தியையும் நிலைநிறுத்த ஒன்றினைவோம்!-எதிர்க்கட்சித் தலைவர்-

Editor