(எம்.ரீ. ஹைதர் அலி)
முந்தைய காலங்களைப்போலல்லாது தற்போது அல்குர்ஆனை தங்களின் சிறு வயதினிலேயே அதிகமான மாணவர்கள் கற்றுக்கொண்டுள்ளனர். குறிப்பாக காத்தான்குடி மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களில் அண்மைக்காலமாக அல்-குர்ஆனினை கற்று தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்களின் வீதம் அதிகரித்துள்ளது. என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.
மஞ்சந்தொடுவாய் அல் மத்ரஸதுல் ஹிழ்றிய்யா குர்ஆன் கலாசாலையின் 15 பரிசளிப்பு விழா 2017.04.14ஆந்திகதி-வெள்ளிக்கி
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்
குர்ஆன் மதரசாக்களை ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு கட்டமைப்பின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று மர்ஹூம் செய்குல் பலாஹ் அவர்களின் முன்மொழிவிற்கமைவாக குர்ஆன் மதரசாக்கள் அபிவிருத்தி சபை என்ற பெயரில் இலங்கையில் முதலாவதாக உருவாக்கப்பட்டதுடன் முதன் முதல் தஜ்வீத் கலாசாலையும் காத்தான்குடியில் உருவாக்கப்பட்டு அதனூடாக அதிகமான மாணவர்கள் தஜ்வீத் முறையில் அல்-குர்ஆனை ஓதுவதற்குரிய சந்தர்ப்பமும் எற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்
அதன் தொடர்ச்சியாக கண்ணியமிக்க பல்வேறு உலமாக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் பெரும் முயற்சி மற்றும் அர்ப்பணிப்பின் பயனாக அல்-குர்ஆனினை கற்ற அதிகளவான ஹாபிழ்கள் எமது பிரதேசங்களிலிருந்து உருவாகுவதற்கு முடிந்தது.