Breaking
Tue. Nov 26th, 2024

(அஷ்ரப்.ஏ. சமத்)

வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமதாச நேற்று முன்தினம் (26) பதுளை மாவட்டத்தில் வீடுகளற்ற 1,813 குடும்பங்களுக்கு விசிரி நிவாச கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் 3070 இலட்சம் ருபா வீடமைப்புக் கடன்களும் மற்றும் 100 இளைஞா்களுக்கு மேசன், மரவேளை சுயதொழில் உபகரணங்களையும் வழங்கி வைத்தாா்.

இந் நிகழ்வு   பதுளை நகர மண்டபத்தில் நடைபெற்றது.   இந் நிகழ்வில் அமைச்சா் ஹரீன் பெர்ணாந்து, பிரதியமைச்சா்கள்  ரவீந்திர சமரவீர, இந்திக்க பண்டார மற்றும் மாவட்டத்தின் அரசியல் பிரநிதிகளும் கலந்து கொண்டனா்.

இங்கு உரையாற்றிய அமைச்சா்  சஜித் பிரேமதாச;

பதுளை மாவட்டத்தில்  9 தோ்தல் தொகுதியில் 15 பிரதேச செயலாளா் பிரிவும்,  567 கிராம சேவகா் பிரிவும் உள்ளன. 8 லச்சத்தி பதினைந்தாயிரம்  மக்கள் குடித்தொகையை கொண்டுள்ளனா் .  ஒவ்வொரு கிராம சேவகா் பிரிவிலும் வீடமைப்பு அபிவிருத்திச் சங்கம் ஸ்தாபிக்கப்பட்டு வருகின்றது. இத் தி்ட்டத்திற்காகவே  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா,  பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவின்  அனுமதி கிடைக்கப் பெற்றது.   இவ் ஆண்டு திரைசேரி மூலம் 58,000 இலட்சம் ருபா  நிதி வீடமைப்புக்காக  ஒதுக்கப்பட்டது. இந்த நாட்டில் உள்ள சகல   இன , மத , பிரதேச   வேறுபாடுகள் இன்றி சரி சமமாக வீடுகள் அற்ற மக்களுக்கு  இவ் வீடமைப்புக்கடன் திட்டம் நாடு முழுவதிலும்  பகிா்ந்தளிக்கப்பட்டு வருகின்றது.
ஏற்கனவே இந்த அரசின்  ஒர் ஆண்டுக்குள்  50க்கும்  மேற்பட்ட வீடமைப்புக் கிராமங்கள் பின்தங்கிய மாவட்டங்களில்  மக்கள் பங்களிப்போடு நிர்மாணிக்கப்பட்டு  திறந்து வைக்கப்பட்டுள்ளன. மேலும் 148 கிராமங்கள் எதிா்வரும் டிசம்பருக்குள் நிர்மாணப்பணி முடிவடைந்து விடும் எனவும் அமைச்சா் சஜித் பிரேமதாச தெரிவித்தாாா்.unnamed (6)
கொழும்பில் ஏற்கனவே ஒரு நிகழ்வு இருந்ததால்  நுவரேலியாவுக்கும் பதுளைக்கும் வீடமைப்புக்கடன் வழங்கும் திட்டத்தில் கலந்து கொள்வதற்காகவே   அமைச்சா் தயாகமகேவிடம் நட்புறவில் அவரது தனியாா்  ஓர்  இயந்திர கெலிக்கெப்டா் ஒன்றை எடுத்து வந்தோம்.  ஆனால்  அது கால நிலையினால்  மறக்கரி தோட்டத்தில்  திடீர் தரையிரக்கப்பட்டது,  இல்லாவிட்டால் எனக்கும் முடியும் எனது அமைச்சின் செயலாளாிடம் ஒரு கெலிக்கெப்பரை தயாா்படுத்தி இங்கு வந்திருக்க முடியும். அவ்வாறனால் நான் இங்கு வீடமைப்புக் கடன் வழங்க முடியாது.unnamed (7)
அந்த நிதி கெலிக்கெப்டா் பயணம் செய்தமைக்கே  இலட்சக்கணக்கில்  அமைச்சு    செலுத்த வேண்டி  வரும். நனோ எனது  அமைச்சர் பதவி வகிகிப்பதற்கு அரசு  மாதாந்த   சம்பளத்தைக் கூட பெறாமல்  அந்த நிதியைக் கூட ஏழை மக்களது வீடுகளை நிர்மாணிக்கவென  பயண்படுகின்றது.  எனவும் அமைச்சா் சஜித் பிரேமதாச தெரிவித்தாா்.unnamed (4)
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *