பிரதான செய்திகள்

எதிர்வரும் பெரும் போகத்தில் விவசாயிகளுக்கு மற்றுமொரு இரசாயன உரம் இலவசம்!

எதிர்வரும் பெரும் போகத்தில் விவசாயிகளுக்கு மற்றுமொரு இரசாயன உரத்தை இலவசமாக வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடியதாகவும் அதற்கு ஜனாதிபதி சாதகமாக பதிலளித்துள்ளதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை, அடுத்த பெரும் போகத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் உரங்களை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களுக்கு பதிலாக விவசாயிகளின் கணக்குகளுக்கு பணத்தை வழங்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, பொது மக்கள் தமது விருப்பத்திற்கு ஏற்ப  இரசாயன உரங்கள் அல்லது கரிம உரங்களை தனியார் அல்லது அரச உரக் கூட்டுத்தாபனத்தில் கொள்வனவு செய்யலாம் என மஹிந்த அமரவீர தெரித்தார்.

Related posts

மன்னார் மாவட்ட உதவி அரசாங்க அதிபர்,சமுர்த்தி உதவி ஆணையாளர் நியமனம்.

wpengine

மன்னாரில் புரெவி தாக்கம்!மாந்தை மேற்கு பகுதியில் கால்நடை பாதிப்பு

wpengine

வட கொரியாவை மிரட்டிய டொனால்டு டிரம்ப்! சீனா கண்டனம்

wpengine