அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சிகளால் நிறுவப்படும் மன்றங்களுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை . !

சூழ்ச்சித் திட்டங்கள் மூலம் எதிர்க்கட்சிகளினால் நிறுவப்படும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்யாது என அமைச்சர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கான சம்பளக் கொடுப்பனவுகள் தவிர்ந்த ஏனையவற்றுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படாது என தெரிவித்துள்ளார்.

வேறு விடயங்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்ய அரசாங்கம் தயாரில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊழல் மோசடிகளை மேற்கொள்வோரினால் ஆட்சி செய்யப்படும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய அரசாங்கத்திற்கு எவ்வித அவசியம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

சிறு சிறு குழுக்கள் ஒன்றிணைந்து ஆட்சியை நிறுவுவதற்கு மக்கள் ஆணையளிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறு சிறு சிறு குழுக்கள் ஒன்றிணைந்து ஆட்சியை அமைப்பது ஜனநாயக விரோதமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு மாநகரசபையின் மேயராக ட்ரோய் பல்தாசர் நியமிக்கப்படுவார் என்பதை எழுதி வைத்துக் கொள்ளுமாறு அமைச்சர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார். 

Related posts

ISIS இயக்கத்தின் கதை முடியப்போகிறது.

wpengine

மாளிகாவத்தையில் இலவச மருத்துவ முகாம்.

wpengine

ஜம்மியாயதுல் உலமா தனது ஊடக அறிக்கையில் ஞானசார தேரரின் வழக்கு விடுவிப்பு பற்றி கூறுகிறதா?

wpengine